உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 69 கூடியதாகவும், ஸ்நானம் செய்தால் சரீரமெல்லாம் சொறிசிரங்கு வரக்கூடியதாகவும் இருந்தால், அதற்காக நாம் செய்யவேண்டிய வேலை என்ன? அந்தத் தண்ணீரில் விஷப்பூச்சிகள் உண்டாகித் தண்ணீரைக் கெடுத்துவிட்டது என்று கருதி, அந்த விஷப்பூச்சிகள் சாகத்தக்க மருந்தை அந்தக் கிணற்றுக்குள் போடுவோம். அப்படிப் போட்ட பிறகும் அந்தத் தண்ணீரின் குணம், அப்படியே முன்போலவே இருக்குமானால் மேற்கொண்டு என்ன செய்வோம்? மருந்துக்கும் கட்டுப்படாத அளவு கெடுதி, அந்தத் தண்ணீரில் உண்டாய்விட்டதாகக் கருதி, அந்தக் கிணற்றுத் தண்ணீர் முழுவதையும் இறைத்து, வெளியில் ஊற்றி, அந்தக் கிணற்றையும் நன்றாகக் கழுவி விடுவோம். அந்தப் படி செய்தபிறகும் மறுபடியும் அந்தத் தண்ணீரின் குணம் அப்படியே இருக்குமானால், அதன் காரணம் என்ன? அந்தக் கிணற்றுக்குத் தண்ணீர் வரும் ஊற்றே விஷத்தன்மை பொருந்தியது. அதாவது விஷநீர் ஊற்றுக் கிணறு என்றுதானே ஏற்படும்? அப்படிப்பட்ட விஷநீர் ஊற்றுக் ஊற்றுக் கிணற்றை என்ன செய்வீர்கள்? பழைய புராணத்தையும் அதில் உள்ள அந்தக் கிணற்றுப் பெருமையையும் மதித்து, அதிலேயே குளித்து, அந்த நீரையே சாப்பிட்டு, விஷ பேதியையும், சொறி சிரங்கையும் அடைந்து கொண்டிருப்பீர்களா? அல்லது அந்தக் கிணற்றை மண்ணைக் கொட்டி மூடிவிடுவீர்களா என்பதை யோசித்துப் பாருங்கள்” என்று பேசினார். இதுதான் தந்தை பெரியார் அணுகுமுறை - கொள்கையை அணுகும் முறை! 6.4.1926-இல் தந்தை பெரியார் காரைக்குடிக்கு வந்தார். தோழர்கள் இராய - சொக்கலிங்கம், பி.ச. சுப்பிரமணியம், வரா, கும்பலிங்கம் பிள்ளை போன்றவர்கள் தந்தை பெரியாரை மேளதாளத்துடன் அழைத்துச் சென்று தாழ்த்தப்பட்டவர் களுக்கென்று தனியாக வெட்டிய கிணற்றைத் திறந்து வைக்கச் சொன்னார்கள்.