கி.வீரமணி 71 தந்தை பெரியார், அவர் கண்ட இயக்கமும் முழுமுதற் காரணமாக இருந்து வந்திருக்கிறது, இருந்தும் வருகிறது! தந்தை பெரியார் அவர்களின் பேச்சு முறை இயல்பான தன்மையும், நகைச்சுவை உணர்வும் நேரிடைப் பொருளும் கொண்டதாக இருக்கும். சாக்ரடீசும், பிளேட்டோவும் எப்படி கேள்விகளை எழுப்பி, மக்கள் மத்தியில் சிந்தனையைத் தட்டி எழுப்பினார்களோ அதுபோன்றதே தந்தை பெரியாரின் அணுகுமுறையும். தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்று அய்.நா. அளித்த விருதில் பெரியார் பற்றிக் குறிப்பிட்டிருந்தது அந்த வகையில் மிகவும் பொருத்தமானதாகும். இதோ பெரியார் பேசுகிறார்: . "மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்தபிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்லவந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தித் தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அஹிம்சா தர்மத்தோடும். இருக்கவேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? இம்மாதிரியான மக்கள் இன்னும் ஒரு நாட்டில் இருந்துகொண்டு உயிர்வாழ்வதைவிட அவர்கள் -
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/78
Appearance