உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 73 வைக்கும் தன்மை கொண்டவை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். 1929-இல் தந்தை பெரியார் சிங்கப்பூர் சென்றிருந்தார். நகர மண்டபத்தில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பார்ஸ்டன் என்னும் ஆங்கிலேயர் தலைமை வகித்தார். தந்தை பெரியார் பேசும்போது இந்தியாவைப்பற்றி அமெரிக்க மாது மிஸ்மோயோ எழுதியுள்ளதுபற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். அப்பொழுது தந்தை பெரியாரிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார். கேள்வி: மேயோ எழுதியதன் கருத்து என்ன? பதில்: கருத்து என்ன என்பதை நாம் பிறகு கவனிப்போம். அந்தம்மாள் எழுதியிருப்பவை உண்மையா? பொய்யா? என்று நாம் முதலில் பார்க்கவேண்டும். கேள்வி: காந்தியார் அந்தம்மாளைச் பரிசோதனை” என்று சொல்லியிருக்கிறாரே?'" "சாக்கடைப் பதில்: திரு. காந்தியார், சாக்கடைப் பரிசோதனை என்று சொல்லியது உண்மையாயிருந்தாலும், சாக்கடை இல்லாத இடத்தையாவது, சிங்காரவனத்தையாவது காட்டி, அவற்றைப் பார்க்க அந்தம்மாளைக் கூப்பிட்டிருக்கலாம். அப்படிக் காட்டுவதற்கு ஆதாரமில்லாததால்தான் காந்தியார் இந்தியர்களைப் பார்த்து, 'மேயோ எழுதிய புத்தகத்தை மறந்து விடாமல் எப்பொழுதும் ஒரு பக்கத்தில் வைத்திருங்கள்" என்று சொல்லியிருக்கிறார். இதன் கருத்து சாக்கடையைச் சுத்தம் செய்யுங்கள் என்பதேயாகும். கேள்வி: வேறு பலர் மறுப்பு எழுதியிருக்கிறார்களே? பதில்: மேயோ சொன்னவற்றை யாரும் முழுதும் மறுக்கவில்லை. மிஸ் மேயோ நாட்டிலும் இவ்விதம் இல்லையா என்றுதான் எழுதியிருக்கிறார்கள். நீ மாத்திரம் யோக்கியனா என்றால், இதற்குப் பெயர் மறுப்பு ஆகுமா? ஒப்புக் கொள்வதாகும்.