உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(21)

கண்ணை மூடிக்கொள்கிறோம்' என்று சொன்னார்கள். உண்மையில் நாங்கள் குழந்தைகள்; நீங்கள் ரொம்பப் பயம்காட்டுகிறீர்கள்; இந்த இரண்டும், நீங்கள் சொல்கிற வாதத்தில் தெரிகிறது. 'பயந்து ஓடி விடுகிறோம்' என்று சொல்வது--'கண்ணை மூடிக்கொள்கிறோம்' என்று சொல்வது, கோழைத்தனம் என்கிற நினைப்பில் சொல்லிவிட்டுச் சிரித்துக்கொள்கிறார்களோ என்னவோ? ஆனால் ஆங்கிலத்தில் சொல்வார்களே இரண்டு வார்த்தைகள்—Prudence Cowardice என்று! இரண்டுக்கும் பொருள், கனம் நிதி அமைச்சருக்குத் தெரியாமல் இருக்காது. 'சபையிலிருந்து நாங்கள் ஓடிவிடுகிறோம்' என்று சொல்வது உண்மையானாலும், கோழைத்தனத்தால் அல்ல; 'இருப்பது முறையாகாது' என்று எழுந்துபோயிருக்கலாம்.

"இன்னொன்றும் தங்கள் மூலமாக நிதி அமைச்சருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ; பயத்தால் கண்ணை மூடிக்கொள்வது ஒன்று; ஒன்றைப் பார்க்க அருவருப்படைகிற நேரத்தில் கண்ணை முடிக்கொள்வது மற்றொன்று; அப்படிச் சில சமயங்களில் ஒரு செயலைப் பார்க்க அருவருப்பு அடைந்து நாங்கள் கண்ணை மூடிக்கொண்டிருக்கலாம். கண்ணை மூடிக்கொள்வது கோழைத்தனமல்ல என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

"மற்றொன்று — திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் பேசும்போது ‘பகுத்தறிவு என்று குறுக்குவழியில் போகக்கூடாது' என்கிறார்கள் குறுக்குவழியில் போவதை மாற்றுவதுதான் 'பகுத்தறிவு' என்பதை அவர் உணர்ந்துகொண்டிருப்பாரேயானால், அப்படிச் சொல்லியிருக்கமாட்டார். 'பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு— புராணங்கள், இதிகாசங்களில் நம்பிக்கை இல்லாவிட்டால் என்ன—அவற்றை ஏன் கொளுத்தவேண்டும்? ஏன் குறுக்குவழியில் போகவேண்டும்? குறுக்கு வழியில் போவதை அனுமதிக்கக்கூடாது, —என்பதாகச் சொன்னார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ளுவேன்—மாகாணத்திலேயே மிகவும் செல்வாக்கு உடையவராக இருக்கக்கூடிய ஒரு தலைவர், 'எதைக் கொளுத்துவேன்' என்று சொல்கிறாரோ, அதைக் குறுக்கு வழி என்று சொல்வது எவ்வளவு பொருத்தமற்றது என்பதைக்காட்ட ஒரு விஷயத்தைக் காட்டவேண்டும்.

"வெகு காலத்திற்கு முன்னாலேயே மார்ட்டின் லூதர் என்பவர், 'கிருத்தவ வேதம்—உலகம் முழுவதும் மிகவும் புனிதமானது என்று கருதுகிற பைபிள் லத்தீன் மொழியிலிருப்பது கூடாது; போப் ஆண்டவரின் ஆதிக்கம் ஏற்பட்டுவிடுகிறது' என்ற ஒரு காரணத்திற்காக, பகிரங்கமாக ஐரோப்பாக் கண்டத்திலே கொளுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கூறுவேன்—நண்பர் திரு. கல்யாண சுந்தரம் அவர்கள் அடிக்கடி ஐரோப்பா போவதனால், ஓய்வு நேரத்தில் இதைப்பற்றியும் அங்கிருந்து தெரிந்து கொண்டு வரவேண்டும் என்பதாகக் கேட்டுக்கொள்கிறேன்,

"ஆகவே, இன்றைக்கு அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது என்பது முரண்பட்ட செய்கையோ, குறுக்குவழி செய்கையோ என்று நினைக்கமுடியாது; ஆனால்