கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் வெளியிட்டார்
47
சமதர்மக் கோட்பாட்டையும், பொது உடைமைக் கொள்கையையும் இலட்சியமாக அறிவித்த பிறகு, அவற்றைப் பரப்புவதில் தீவிரமாக முனைந்தார்.
சமதர்மக் கோட்பாட்டிற்கு ஊற்றுக்கால் எது? 1847ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ’ என்ற சமதர்ம அறிக்கையாகும். அவ்வாண்டு இலண்டனில், ஒரு அனைத்துலக சமதர்ம மாநாடு நடைபெற்றது. அப்போது, சமதர்ம இயக்கத்தின் சார்பாக, அதன் கொள்கையைத் திட்டவட்டமாக வெளியிட முடிவு செய்தார்கள்.
அவ்வறிக்கையைத் தயாரிக்கும் பணியை, காரல்மார்க்சு, பிரட்ரிக் எங்கல்சு என்ற இரு ஜெர்மானியப் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் உலகப் புகழ் பெற்ற சமதர்ம அறிக்கையைத் தந்தார்கள். அந்த அறிக்கையை 4-10-1931 நாளைய குடி அரசில், தமிழாக்கம் செய்து வெளியிட்டார். அப்படி வெளியிட்ட போது, பெரியார் ஈ. வெ. ராமசாமியே ஒரு முகவுரை எழுதினார். அதில்,
‘சமதர்ம உணர்ச்சி ஒரு எண்ணமாய் ஏற்பட்டு, அதன் தத்துவங்களைப் பற்றியும், கொள்கையைப் பற்றியும் வெளியில் எடுத்து, மக்களுக்குத் தெரியும்படியாக மாநாடுகள் மூலமும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக நமக்கு விளங்கும்படியாய்க் காணப்படும் காலமே இன்றைக்கு சுமார் 80, 90 ஆண்டுகளுக்கு முன்பு என்று தெரிகின்றது. அதாவது 1847ஆம் ஆண்டிலேயே இலண்டன் மாநகரத்தில், உலகத்திலுள்ள சமதர்மவாதிகளுடைய மாநாடு ஒன்று நடந்திருப்பதாகவும், அதன் பயனாய் அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது,’ என்று கோடிட்டுக் காட்டினார். இது பலரும் அறிந்த உண்மையே.
சமதர்மம் ஏன் இரஷ்யாவில் முதலில் நடைமுறைக்கு வந்தது? இக்கேள்விக்குப் பெரியார் கூறிய விளக்கத்தைக் காண்போம்.
‘அதை (சமதர்மத்தை) சீக்கிரத்தில் கையாளப்படவும், அனுபவத்திற் கொண்டு வரவும் முயற்சித்த நாடு இரஷ்யாவாக ஏற்பட்டு விட்டது.
‘சரித்திரத்தில் சமதர்ம உணர்ச்சி பெற்றவர்களில், முதன்மையான முக்கியஸ்தர்கள் ஜெர்மானியர்களாயிருந்தாலும், அதற்காக