உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

கண்ட பெரியார் நான் எங்குத் தவறாக நடந்து கொண்டுவிடுவேனோ என்று தொடையைக் கிள்ளி ஜாடை காட்டினார். அதன்பின் நானும் சற்று அமைதியடைந்து பொறுமையாக இருந்தேன். பின் பெரியார் அவர்கள் பேச ஆரம்பித்து, ஒவ்வொரு சங்கதியாக எடுத்து விளக்க ஆரம்பித்ததும் அவர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டுவிட்டது. இதுபோன்ற கருத்தை அவர்கள் அதுவரை கேட்டதே இல்லை.. அப்போதுதான் அவர்கள் புதுமையாகக் கேட்கின்றனர். இராமாயணத்தைப் பற்றி அவர் விளக்கியதைக் கேட்கக் கேட்க, சற்றுத் தெளிவு ஏற்பட்டிருக்கிறது. கூட்டம் முடிந்ததும் அம்மாணவர்கள் 'ராவணாக்கி ஜே!' என்று கோஷம் போட ஆரம்பித்துவிட்டனர். அதுபோன்று இருக்கின்ற உண்மையினை எடுத்துக்கூறினால், மக்கள் ஒத்துக்கொள்ளாமல் போகமாட்டார்கள். அவர்களை விட நம் மக்கள் தெளிவு பெற்றவர்களாவார்கள்.

பெரியார் பணியை
எல்லோரும் மேற்கொள்ள வேண்டும்

நம் நாட்டில் உத்தியோகத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற பெரும் புலவர்கள், படித்துப் பட்டம் பெற்றவர்கள், மேதாவிகள் என்பவர்கள் முன்வந்து தங்களுக்கு உண்மையென்று தோன்றியதைத் தாங்கள் பதவியிலிருக்கும்போது சொல்லப்பயந்ததைத் துணிந்து எடுத்துச் சொல்லவேண்டும். பெரியாரவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் பணியினை மேற்கொண்டு தொண்டாற்ற முன்வரவேண்டும். நமது பெரியவர்கள் எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற எண்ணத்தை விட்டுப் பொதுத்தொண்டு செய்ய முன் வரவேண்டும்.

கல்வி முறையை மாற்றியாக வேண்டும்.

நமது பள்ளிக்கூடங்களில் கங்கை. எங்கே உற்பத்தியாகிறது என்பதை பூகோள வகுப்பில் சொல்லிக்கொடுக்கும்போது, 'அது ஹரித்துவாரிலே உள்ள மலையில் உற்பத்தியாகி வருகிறது' என்று