44
மணங்கள், குருக்கள் இல்லாமலும். மந்திரங்கள் சொல்லப்படாமலும், ஓமத்தீ இல்லாமலும் நடத்தப்படும் திருமணங்களாகும்.
சுயமரியாதைத் திருமணத்தின்
நெடுங்கதை பாரீர்
ஒரு கிராமத்தில் பெரியார் (ராமசாமி) அவர்களும், நானும் ஒரு சுயரியாதைத் திருமணத்தை வைக்கச் சென்றபோது, போலீஸ் அதிகாரி ஒருவர் எங்களைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி சொல்லி அனுப்பினார், நாங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றபோது, எங்களைக் கைது செய்யவோ, காவலில் வைக்கவோ அழைக்கவில்லையென்றும், சனாதனிகளால் தொல்லை நேராது எங்களைப் பாதுகாக்கவே அழைத்ததாகவும் அந்தப் போலீஸ் அதிகாரி கூறினார். ஆனால், இன்றோ தமிழ்நாடெங்கும் அத்தகைய சுயமரியாதைத் திருணங்கள் நடைபெற்றவண்ணமுள்ளன. அவைகள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாக மசோதாவொன்று நான் கொண்வந்து நிறைவேற்றிவிட்டேன்."
[ஆந்திராவிலுள்ள தெனாலியில் கவிராசு
ராமசாமி சவுதரி—ஆவுல கோபாலகிருஷ்ண
மூர்த்தி "பவ விகாச கேந்திர"த்தை 29-1-68
அன்று திறந்துவைத்து ஆற்றிய உரையின்
ஒரு பகுதி]