பக்கம்:பெரியார் அறிவுச் சுவடி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரித்திரம் அறிந்தவன் சாத்திரம் பேசான்

சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை

சிந்தனைச் செல்வமே சிறந்த செல்வம்

சீவனை விட்டபின் சிரார்த்தம் எதற்கு?

சுகமென்று எதுவும் சொர்க்கத்தில் இல்லை

சூட்சுமம் என்பது சூழ்ச்சியே யாகும்

செத்ததும் விடுவான் மருத்துவன்; செத்தாலும் விடான் புரோகிதன்

சேக்கிழார் செய்ததே சிவனார் லீலைகள்

சொர்க்கம் என்பது சுரண்டி வாழ்வதற்கே

சோதிடம் சொல்வது சோற்றுக்கு என்று அறி