உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு.கருணாநிதி 21 கூட நடத்துவீர்கள். என் நிலையில் நீங்கள் இருந்து பார்த்தால் அப்படிப் பேசமாட்டீர்கள். உலகநாதரின் குரலைப்பற்றி ஒரே ஒரு வார்த்தை, வாயைத் திறந் தாலே போதும், வாந்தியெடுப்பவனுக்கு பிற்றிலிருந்து கிளம்புவது போன்ற வறட்டுச் சப்தம். அதைக் கோகி லத் தொனி என்று தான் கூறிக்கொள்ள வேண்டுமா? நீங்கள்தான் தீர்ப்புக் கூறுங்களேன். என்னைப் பற்றி நானே கூறிக்கொள்வதாக எண்ணாதீர்கள். ஒரு பணக் கார வீட்டுப்பெண், போதுமான அழகுடையவள். இள மையின் எழுச்சியில், இன்பத்தின் அடிவாரத்தில் உலா வத் தொடங்குபவள், 'எண்ணாத எண்ணங்கள் எண்ணி யவள்' எதிர்காலத்தைப் பற்றி எட்டாத பேராசைக் "கோட்டைகள் கட்டியவள்,""கண்ணம்மாளா? கட்டழகி யாயிற்றே! கட்டுடல் வாய்ந்தவளாயிற்றே!" என்று ஊராரின் மதிப்புரையைப் பெற்றவள் கடைசியில் ஒரு கண்ராவியான மனிதனைக் கட்டிக்கொள்வ தென்றால், அது நியாயமா? பச்சிளங் குழந்தையும் பரிகாசஞ் செய் யுமே! தோழிகள் 'தூ' என்று துப்புவார்களே! து என்ன, வராகாவதாரத்தைக் கண்டு பூமா தேவி விரகதாபங்கொண்ட காலமா? அதுவுமில்லையே ! என்னை விபசாரி என்று கூறுகிறீர்களே; எனக்கு அந்த வாழ்வை அமைத்துக் கொடுத்தது உங்கள் வைதீக உலகந்தானே! வாழ்வில் கோணல் ஏற்பட்டு விட்டதே என்று வாடினேன்; வதங்கினேன். ஆனால் அதை உலகநாத ரிடம் காட்டிக்கொள்ளவில்லை. என் தாய் தந்தையரைச் சபித்துக்கொண் டிருந்தேன், என் சாபங்களுக்கு மட்