உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D மு. கருணாநிதி 23 ஆனால், எழில் மிக்கவன் எனக்கு வேண்டியது. அது தானே! உலகநாதரின் குரலில் ஒரே கரகரப்பு, வீர னின் தொனியில் வீணை கிளப்பும்!நாதரின் கண்களுக்கு ஆந்தை அருமையான உதாரணம்; வீர னின் கண்களோ என் விலாவைக் குத்தி வேதனைக் கிளப்பிய வேல்கள்! உலகநாதரின் பல்வரிசை பார்க்கப் பயங்கரம்; வீரனின் பற்களோ முத்துக் கோவை! அவ்வளவு ஏன்? வீரன் என்னை இந்திர விமானத் தில் இட்டுச் சென்றான். இன்பபுரியில் சுற்றுப் பிரயா ணம் செய்ய. வீரனுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதை உலக நாதர் அறியவே இல்லை. அவர் அறியாதபடியே நான் நடந்துகொண்டேன். அவரது ஆசை மனைவிபோல நடந்தேன். அவரைக் கடவுளாகக் கருதுவதாகக் கூறினேன். பாதங்களைக் கண்களில் ஒத்திக்கொண் டேன். பாசமுள்ள பத்தினிமேல் பாசாங்கு செய்தேன். உலகநாதர் என்னை நம்பியே இருந்தார். இவ்வளவு நாடகமும் நான் ஆடாவிட்டால் அவர் என்னை நம்பு வாரா? ? தலையை வலிக்கிறது என்று சொல்வார்; எனக்கே வலி ஏற்பட்டதாக வருத்தத்தை வரவழைத் துக் கொள்வேன், அவர் நன்றாக ஏமாந்து விடுவார். ஏமாறட்டுமே! எனக்கென்ன! வீரன் என் வலையில் சாதாரணமாக விழுவேன் என்றானா? அப்பப்பா! எவ்வளவு கஷ்டம்? எஜமானி அம்மாள் ஆயிற்றே என்று முதலில் பார்த்தான். பெரிய இடத்து விஷயமாயிற்றே என்று கலங்கினான். 'ஒய்யா