உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பெரிய இடத்துப் பெண் சென்றதாக நான் நளாயினி கதை படித்ததுண்டு. இந்தக் கலியுக நளாயினி என்னையே அவள் கணவ் னுக்குக் காணிக்கை யாக்குவாள் என்று நான் கருத வில்லை. இனி இந்த விபசாரிக்கு ஏன் வாழ்வு! வைர நகை போட்டறியாத குமுதா வைரத்தையே பொடி செய்து சாப்பிட்டு விட்டாள். ஆம், எஜமானியம்மாளின் வைர மூக்குத்தியைத் தூள் செய்து சாப்பிட்டுவிட்டேன். எந்த எஜமானி என்னை அவளது கணவனின் கட்டி லறைக்கு அனுப்பினாளோ, அதே எஜமானியின் மூக்குத்தி என்னைக் கைலாசத்திற்கு அனுப்பட்டும். அத்தான்! என்னை மன்னித்து விடுங்கள். குமுதா அழுக்குப்பட்டவள்; களங்க மடைந்தாள். அவளை மறந்து விடுங்கள்! மனித சமூகமே! நீ இனிமேலாவது உலகநாதர்களை உற்பத்தி செய்யாமல் இருக்கமாட்டாயா! கண்ணம்மாக் களைக் காசினிக்கு அனுப்பாம லிருக்கமாட்டாயா? அந்த வேண்டுகோளின்மீது என் உயிரை உனக்கு அர்ப் பணிக்கிறேன். என் உடலை மண்ணாக்குகிறேன். அத்தான்! அத்தான்!! இப்படிக்கு இறக்கப் போகும் குமுதா