காப்பிய காலம்வரை சிவன் 9 9 படும் தியான புத்தக் கொள்கையைத் தோற்றுவித்த போதிதருமர் இக்காஞ்சி மண்ணில் தோன்றியவரே ஆவார். என்றாலும் பெளத்தம் தமிழகத்தில் கால் கொள்ளாத காரணம் யாது? வைதிகர்களைப் போல இத் தமிழர் கடவுட் கொள்கையைப் பெளத்தர் ஏற்கவில்லை. அது போகட்டும். சமணரைப் போல இவர்கள் தமிழ் மொழியையாவது கற்றுக் கொண்டு தமிழில் பெளத்தம்பற்றிய நூல்கள் ஏதாவது எழுதினார்களா? அதுவும் இல்லை. கருவேப்பிலைக் கன்றுபோல் தமிழில் பெளத்தம் பற்றிப் பேச எழுந்த முதல் காப்பியம் மணிமேகலை ஆகும். அந்த ஒரு நூலாவது சிலம்பைப் போலச் சகிப்புத் தன்மையுடன் உள் நாட்டுச் சமயங்களுடன் ஒத்து வாழ முற்பட்டதா? இல்லையே! சமயப் பொறை இன்மைக்கு முதன் முதல் வித்திட்ட பெருமை மணிமேகலையையே சாரும். தொல் சமயங்களாகிய வேதம், நிகண்டவாதம், சைவம் முதலிய சமயங்களை ஒருவரி அல்லது இரண்டு வரிகளில் தூக்கி எறிந்து எள்ளி நகையாடிற்று. எனவே தான் அச்சமயத்தையும் இத் தமிழர் தூக்கி எறிந்து விட்டனர். 'பெளத்தர்களை வெருட்டிய பெருமை வைதிக சமயத்திற்கு இல்லை. அப் பெருமை சைவ சமயத்தையே சாரும் எனத் தாண்டேகர் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த அடிப்படையை ஓரளவு புரிந்து கொண்டால் பரிபாடல் போன்ற நூல்கள் ஏன் தோன்றின? என்பதை ஒருவாறு உணர முடியும். முருகனைப் பற்றித் திருமுருகாற்றுப்படை கூறாத கதைகளைப் பரிபாடல் கூறுவதன் நோக்கம் யாது? இதிகாச புராணங்களில் திருமால் பற்றியுள்ள கதைகளைத் திருமால் பற்றிப் பாடும் பரிபாடல்கள் கூறத் தொடங்கின. உடனே முருக வழிபாட்டினர் முருகனுக்கும் அத்தகைய கதைகள் சேர்க்க முயன்றனர். திருமால் அவுணர்களை அழித்தான். முருகன் சூரபதுமனை அழித்தான். அவன் பிற தெய்வ வடிவாகவும் தானே நிற்கின்றான் என்று கூறினவுடன், முருக பக்தராகிய நல்லந்துவனார் பரிபாடல் 8ஆம் பாடலில் அந்தத் திருமால் உள்பட பிற தெய்வங்கள் முருகனை வந்து வணங்கச் செவ்வி பார்த்துக் காத்திருக்கின்றனர் என்று பாடுகிறார். இவர்களுடைய இந்தப் போட்டியில் தொல் பழஞ் சமயக் கடவுளாகிய சிவபெரு மானும் காவு கொடுக்கப்படுகிறான். சமயப் போராட்டம் என்று வந்து விட்டால் தம் கொள்கையை நிலை நிறுத்துவதற்காக யாரை வேண்டுமானாலும் பலியிட அச்சமயத்தார் தயாராக அன்றும் இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர்; நாளையும் இருப்பர் என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும் இது.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/127
தோற்றம்