உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 2 பெரியபுராணம்-ஒர் ஆய்வு அறத்தின் உண்மைத் திறம் தெரிந்த மன்னவன் இறுதியாகத் தன் முடிவைக் கூறுகிறான்: ‘.............. இவ் ஆன் மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது தனதுறுபேர் இடர் யானும் தாங்குவதே தருமம் " என்பதுவே அவன் கண்ட முடிபாகும். இவ்வாறு விரிவான முறையில் அறநெறியின் உண்மைத் திறம் யாது என்பதை இத் தமிழர் கண்ட முறையில் எடுத்துக் கூறுவதன் மூலம் இங்கு அமைதியாக நடைபெற்ற போராட்டத் தில் சேக்கிழாரும் தமது பங்கைச் செலுத்துவதைக் காண முடி கிறது. தொல் பழஞ் சமயமாகிய சைவ சமய நெறி நிற்பவர் கட்கு, எல்லா உயிர்களும் ஒன்றுதான். அனைத்துடம்புகளும் இறைவன் உறையும் கோயில் தாம். 'உறை சேரும் எண்பத்துநான்கு நூறாயிரமாம் யோனி பேதம் நிறை சேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்' என்பது தேவாரம். எனவே எல்லா உயிர்களிலும் அது அரச குமாரனாயினும் பசுங் கன்றாயினும் பன்றிக் குட்டியாயினும் இறைவன் உறைகின்றான் என்று இத் தமிழர் கருதியதால் அவர் களைப் பொறுத்தவரை அனைத்துயிர்களும் சமமான மதிப்பு உடையனவேயாம். எனவே ஒருவர் செய்த பாவத்தைப் பிராயச் சித்தத்தால் போக்குவது இயலாது என்ற தமிழ் நாட்டு அறநெறியை நினைவூட்டவே இவ்வரலாறு இத்துணை விரிவாகப் பேசப்பெற்றது.