உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 7 I 3 அழைக்கின்றார்! எப்படி? தையலார் தலைவர் பணி (அடியார் ஆணை) தலை நிற்பாராய் அழைக்கின்றாராம்! மைந்தன் என்ற உறவு முறை இல்லை 'அடியார் ஏவற்படி சீராளா வாராய்!” என்றார். ஏன்? தனக்குப் பிள்ளைக்கலி தீர்க்கவா? இல்லை! அடியார் யாம் அனைவரும் உய்யும் பொருட்டு உடனுண்ண அழைக்கின்றார் என்று கூறுவதால் அகங்கார மமகாரமற்றுத் தலைவன் ஏவலை நிறைவேற்று முறையில் அழைத்தமையின் பள்ளியினின்று மகன் ஓடிவந்தான் எனக் கவிஞர் பாடிச் செல்கிறார். தொண்டர்கள் அனைவரும் ஒரு தன்மையரே. அவர்களுள் ஏற்றத் தாழ்வு என்பதற்கு இடமே இல்லை! என்றாலும் அவரவர் சூழ்நிலைகளுக்கேற்ப அவர்கள் செய்யும் தொண்டும், தியாகமும், சோதனைகளும் மாறுபடுகின்றன. இவை அனைத் தையும் எடைபோட்டு அந்த அந்தத் தொண்டரின் மனவியல் தெரிந்து பாடுவது குன்றைநகர் ஆளியாராம் சேக்கிழார்க் கல்லது பிறர்க்கு இயலாது. வழக்குகளை விசாரிப்பதில் வழக்கறிஞராகவே ஆகிவிடுகிறார் இன்றுங்கூட உலகியலில் ஒன்றைக் காணமுடியும். இருவ ரிடையே வழக்கு என்ற ஒன்று வந்துவிடுமேயானால், யார் அதிகம் கூப்பாடுபோட்டு ஊரைத் திரட்டுகிறார்கள் என்பதை இன்றுங் காணமுடியும். யாருடைய கை தாழ்ந்துள்ளதோ, யாரிடத்தில் வழக்கை வெல்வதற்குத் தேவையான சான்றுகள் குறைவாக உள்ளனவோ, அவர்களே அதிகம் இரைச்சலிட்டு வாதம் செய்வர். அதிலும் அவ்வாறுள்ளவர்கள் வயதிலும் மூத்தவர்களாய், கிழவர்களாய் இருப்பின் கேட்கவே தேவை இல்லை! தங்களுடைய மூப்புக் காரணமாகவே எதிராளி தம்மை வெல்ல வழிவகுப்பதாகக் கூப்பாடு போடுவர். இந்த உலகி யலையே கவிஞர் தடுத்தாட் கொண்ட புராணம், திருநீலகண்டர் புராணம், அமர் நீதியார் புராணம் என்ற மூன்றிலும் வைத்துக் காட்டுகிறார். இந்த மூவரிடத்தும் வழக்கு தொடுத்தவன் ஒருவனே யாவான். மூன்று இடங்களிலும் கிழட்டு வடிவமே கொண்டு சென்று வழக்குத் தொடுக்கின்றான். இந்த முப்பு அவனுடைய வழக்கிற்குச் சாதகமாக அமைகின்றது. பார்ப்பவர் களை அவன்பால் இரக்கங்கொள்ளச் செய்கின்றது. இதனை நன்கு எடுத்துக்காட்டுகின்றார் கவிஞர். சுந்தரர் திருமணத்தைத் தடுத்து வழக்கிடும் முதியவன் பற்றிக் கூற வந்த கவிஞர்,