பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் காலத்துச் சைவ சமய நிலைமை f{}3 வாயிலிலும் உள்ள அழகொழுகும் சிற்பங்களும் இராசேந்திரன் காலத்திற்றானே செய்யப்பெற்றனவாதல் வேண்டும். தன் தந்தை கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலில் சண்டீசர் வரலாறு இரண்டு வரிசைச் செப்புச் சிலைகளால் விளக்கப்பட்டதை அறிந்த இராசேந்திரன் தான் கட்டிய கோவிலில் அதனை நான்கு வரிசைகளில் விளக்கி, மேலும் சண்டிசப் பதத்தை யாவரும் தெளிவுறக் கண்டு நற்பேறு பெற வாயிலருகில் அமைத்தனன் எனக்கோடலே பொருந்தும். இவ்விறுதிச் சிற்பம் கோவில் கட்டப்பெற்ற காலத்தே செய்யப்பட்டதென்பதைப் பிற சிற்பங்கட்கும் இதற்கும் உள்ள வேலை அமைப்பைக் கொண்டும் தெளிவாகவுணரலாம். மேலும், அங்குச் சண்டீசர் தனிக் கோவிலில் உள்ள சிற்பத்தைக் கொண்டும் இவ்வுண்மை æ_6ĞTIJóÚITI D. நாயன்மார் பற்றிய ஓவியங்கள் தஞ்சைப் பெரிய கோவில் இறைவன் உள்ளறை மேலைப் புறச்சுவர்" மீது காணப்படும் சோழர்கால ஒவியங்களிற் சிறப்பாகக் குறிக்கத்தக்கவை : 1. கயிலையில் சிவபிரான் இருத்தல் 2. சுந்தரரை இறைவன் தடுத்தாட் கொண்ட வரலாறு 3. சுந்தரர் யானைமீதும் சேரமான் குதிரைமீதும் கயிலை செல்லல் 4. கந்தர்வர் அவ்விருவர்மீதும் மலர்மழை பொழிந்து இசை முழக்கல்" இனி இவற்றை ஓவியங்களிற் கண்டவாறு விளக்குவோம்: 1. இது மேற்சொன்ன நான்கிலும் மேலே இருப்பது. இதனில் சிவபிரான் மான் தோல்மீது யோக நிலையில் காண்கிறார். அவரைச் சுற்றிலும் பக்தரும் கணங்களும் காண்கின்றனர். 2. ஒருமண்டபத்தில் இளைஞரும் முதியரும் கூடியுள்ளனர். அவர்கள் மறையவர். அவர்கட்கு இடையில் இருவர் எதிர் எதிராக நிற்கின்றனர். அவருள் ஒருவர் கிழவர். அவர் முதுகு வளைந்துள்ளது. அவரது ஒரு கையில் தாளங்குடை உள்ளது. மற்றெரு கையில் பளை ஒலை இருக்கின்றது. அவருக்கு எதிர் நிற்பவர் இளைஞர். அவர் அடக்கத்துடன் நிற்கின்றார். கூட்டத்தினர் முகத்தில் வியப்பும் திகைப்பும் வழிகின்றன. இக்கூட்டத்தினர்க்கு வலப் பக்கம் ஒரு கோவிலின் விமானம் தீட்டப்பட்டுள்ளது. மண்டபத்திற் குழுமியிருந்த மறையவர் அக் கோவிலுள் அவசரமாக நுழைகின்றனர். 3. வெள்ளானை, பூனிட்ட நான்கு கோடுகளுடன் காண்கிறது. அதன்மீது தாடியுடைய இளைஞர் ஒருவர் இவர்ந்து செல்கிறார். அவர் கைகளில் தாளம் இருக்கிறது. இக்காட்சிக்கு வலப்பக்கம் விரைந்து செல்லும் குதிரை