உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் காலத்துச் சைவ சமய நிலைமை 117 முடிவுரை இங்ங்ணம் நாயன்மார் பெயர்கள் இத்தமிழகத்து மடங்களுக்கும் மக்கட்கும் இட்டு வழங்கிய சோழர் காலம் வைசவமயத்தின் பொற்காலம் என்னலாம். தமிழகத்துக் கோவில்கள் சோழர் ஆட்சியில் ஒப்புயர்வற்ற நிலையை அடைந்தன. அவற்றில் நாயன்மார் உருவச்சிலைகள் வைத்துப் பூசிக்கப்பெற்றன: திருப்பதிகங்கள் ஒதப்பெற்றன; கோவில்களிலும் கோவில்களை அடுத்தும் மடங்கள் இருந்து சமயக் கல்வியைப் புகட்டி வந்தன; சிவயோகியர், மாகேசுரர். மாவிரதியர் போன்ற சைவ சமயத் துறவிகட்கு உண்டியும் உறையுளும் நல்கின; கோவில்கள் நாகரிகக் கலைகளாய சிற்பம், ஒவியம், நடனம், இசை இவற்றை வளர்த்தன. நாயன்மார் வரலாறுகள் திருமுறைகள், சிற்பங்கள் ஓவியங்கள், விழாக்கள், படிமங்கள் இவற்றின் வாயிலாகச் சேக்கிழார்க்கு முன் இத் தமிழகத்தில் பேரளவு பரவியிருந்தன என்பது இதுகாறும் கூறப்பெற்ற பலவகைச் சான்றுகளாலும் நன்கு உணரக் கிடத்தல் காண்க. - - - -