உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் பற்றிய செய்திகள் 159 விக்கிரமாதித்தன் காலம் கி.பி. 654-680. நெடுமாறன் காலமும் இத்துடன் ஒத்துவரலால், நெல்வேலிப் போரில் ஈடுபட்ட வடபுலத்து முதல் மன்னன் இவனாகவே இருத்தல் வேண்டும். இம் முதலாம் விக்கிரமாதித்தன் பரமேசுவரவர்மனை (கி.பி. 670-685)ப் போரில் தோற்கடித்துக் காஞ்சியைக் கைப்பற்றிப் பல்லவ நாட்டின் தென் எல்லையான உறையூரில் தங்கினான் அங்ங்னம் தங்கிய ஆண்டு கி.பி. 674 என்று அவன் உறையூரிலிருந்து விட்ட கத்வல் பட்டயம் குறிக்கிறது. அது, சாளுக்கியன் பரமேசுவரவர்மனை வென்றதை மட்டுமே குறிக்கிறது: பாண்டியன் எதிர்த்ததைக் குறிக்கவே இல்லை. ஆயின், அவனைப் பெருவளநல்லூரில் பரமேசுவரவர்மன் எதிர்த்துக் கடும்போர் புரிந்து வென்றான் என்பதைக் கூரம் பட்டயம் விளக்கமாகத் தெரிவிக்கிறது. சாளுக்கியனுடைய கேந்தூர்ப் பட்டயங்கள் அவன் சேர, சோழ, பாண்டியருடன் போரிட்டதைக் குறிக்கின்றன." இவற்றை நோக்க, முதலில் பரமேசுவரவர்மனைத் தோற்கடித்த விக்கிரமாதித்தன் உறையூரில் தங்கினான் என்பதனால், அவன் சோழநாட்டையும் வென்றவனாதல் வேண்டும். அப்பொழுதாண்ட சோழன் மங்கையர்க்கரசியாரின் தந்தை அல்லது உடன் பிறந்தான் ஆகலாம். உறையூர் வரை வெற்றிகொண்ட சாளுக்கியன் எஞ்சியிருந்த பாண்டியனையும் தாக்க முனைந்திருத்தல் இயல்பே. சாளுக்கியன்-பாண்டியன் போர் நெல்வேலியில்’ நடந்தது. சாளுக்கியன் தோல்வி அடைந்தான். இப்போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் பரமேசுவரவர்மன் பெரும்படையுடன் வந்து பாண்டியர் பக்கம் சேர்ந்திருக்கலாம். முதற்போர் நெல் வேலியில் பாண்டியற்குச் சாதகமாயிற்று. இரண்டாம் போர் பெருவளநல்லூரிற் பல்லவனுக்குச் சாதகமாயிற்று. இப்போர்களில் நெடுமாறன் மகனான கோச்சடையனும் பரமேசுவரன் மகனான இராச சிங்கனும் பங்கு கொண்டனர் போலும் 'ரணரஸிகன்' எனப்பட்ட விக்கிரமாதித்தனை வென்றமையால் கோச்சடையன் ரணதீரன்' எனப்பட்டான்; அங்ங்னமே இராசசிங்கன் ரணஜயின்' எனப்பட்டான். இங்ங்னம் ஒரே காலத்திற் போரில் ஈடுபட்ட பிற்காலச் சத்யாஸ்ரயனும் அவன் சிற்றரசனான குந்தமரசனும் தம்மைத் த்ரெளளமாரி தமிழருக்குக் கொள்ளை நோய் போன்றவர் எனக் கூறிக் கொண்டமை இங்கு நினைக்கத் தக்கது. பல்லவனும் பாண்டியனும் ஒன்றுபட்டுச் சாளுக்கியனை வெற்றி கண்டதன் பயனாக, அவர்கட்குள் ஒற்றுமை ஏற்பட்டது. அதனால் இராசசிம்மன் தன் மகளைக் கோச்சடையற்கு மணம் செய்திருக்கலாம். என்னை? கோச்சடையன் மகன் இராசசிம்மன் எனப்படலால் என்க. மேலும் இராசசிம்ம பல்லவனை அவன் காலத்துப் பாண்டியன் பேரரசனாக மதித்தான் என்பதற்கும் சான்றுண்டு." முதல் பரமேசுவரனைத் தோற்கடித்துப் பெரு வெற்றியுடன் வந்த சாளுக்கியனை நெடுமாறன் எதிர்த்து நெல்வேலியில் தோற்கடித்தாற்றான்.