பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரும் அவர் காலமும் 17 5. சேக்கிழார் பெரிய புராணம் பாடியவர். இனி, அபநாயன் யாவன் என்பதைக் காண்போம். பின்னர்க் கல்வெட்டுச் செய்திகளையும் மேற்சொன்ன சேக்கிழார் வரலாற்றுச் செய்திகளையும் ஆராய்ந்து பொருந்துவன காண்போம். அநபாயன் யாவன்? சேக்கிழார் காலத்தைத் தத்தமக்குக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு ஆராயந்து முடிபுகட்டிக் கூறினோர் பலராவர். அவர் முடிவுகளைக் கீழே காண்க. 1. சேக்கிழார் - இராசேந்திரன் I (கி.பி. 1012-1044) காலத்தவர்' 2. சேக்கிழார் - முதற் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120 காலத்தவர்" 3. சேக்கிழார் - இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1113-1150 காலத்தவர்' 4. சேக்கிழார் - மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178-1218 காலத்தவர்' இவற்றுள் முன் இரண்டு முடிபுகளும் பொருந்துவன அல்லவென்று முன்பே அறிஞர் விளக்கிவிட்டனர். ஆதலின், அவைபற்றி நாம் பேச வேண்டுவதில்லை. சேக்கிழார் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவர் என்பார் கூற்று புதியது. ஆதலின் அவர் கூறும் காரணங்களை ஆராய்ந்து முடிபு காணல் நமது கடமையாகும். அவர் கூறும் காரணங்களாவன : 1. “இரண்டாம் குலோத்துங்கனை உலாவிற் பாடிய அவனது ஆசிரியரான ஒட்டக்கூத்தர். அவ்வுலாவில் (வரிகள் 765-116) அவன் பேரம்பலம் பொன் வேய்ந்ததைக் குறிக்கவில்லை. ஆதலின், அவன் பேரம்பலம் பொன் வேய்ந்தவன் ஆகான். 2. "இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் பெரிய புராணம் பாடியிருப்பின், ஒட்டக்கூத்தர் அதனை உலாவிற் கூறாதிரார். 3. "இரண்டாம் குலோத்துங்கற்கு ஆசிரியர் ஒட்டக்கூத்தர் அவர் சிறந்த சிவபக்தர். அரசன் அவரைக் கொண்டு பெரியபுராணம் பாடச் செய்யாது. சேக்கிழாரைக் கொண்டு பாடச் செய்தான் என்பது பொருத்தமற்றது. 4. “திருப்புறம்பயத்துக் கல்வெட்டுகளில் பேரம் பலம் பொன்வேய்ந்த சோழன்’ என்பதைக் குறிப்பிடும் கல்வெட்டுக்கு மேல் உள்ள கல்வெட்டு மூன்றாம் இராசராசனுடையது எனக் கல்வெட்டாளர் கொண்டனர். இரண்டாம் குலோத்துங்கற்கு மூன்று தலைமுறைக்குப் பிந்தியவன், மூன்றாம் இராசராசன். எனவே, மூன்று தலைமுறைக்குப் பிந்தியவன். கல்வெட்டு மேலும், முந்தியவன் கல்வெட்டுக் கீழும் அமையுமாறு எங்ங்னம்? முந்தியவனது மேலும்,