உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f74 பெரியபுராண ஆராய்ச்சி நிலத்தைக் கைப்பற்றி வரியிலியாகப் பிராமணர்க்கு அளித்தான் இரண்டாம் நந்திவர்மன்' என்பது உதயேந்திரப் பட்டயத்தில் காணப்படுகிறது. இக்குறிப்பைப் பற்றி அறிஞர் தாமஸ் போக்ஸ், இந்த நிலத்துக்குரியவர் சமணர். அவர்களை அழித்து இந்நிலத்தைப் பிராமணர்க்களித்தமை என்பது, பல்லவ மன்னன் வரலாற்றில் ஒரு களங்கத்தை உண்டுபண்ணி விட்டது. இச்செயல் அக்கால நிலைமையை ஒட்டியது போலும்'" என்று கூறியுள்ளார். இக்கூற்றுகளால், வைணவனான பல்லவ மன்னன் தன் முன்னோர் சமணர்க்கு விட்டிருந்த நிலத்தைக் கவர்ந்து மறையவர்க்கு உரிமையாக்கினான் என்பது பெறப்படும். சிற்பச் சான்று காஞ்சி-வைகுந்தப் பெருமாள் கோவில் உட்சுவர் மீதுள்ள சிற்பங்களில் ஒன்று பல்லவமல்லவன் சமயக் கொடுமையைக் குறிக்கிறது, அரசன் அரியணையில் அமர்ந்துள்ளான், அவனுக்கு எதிரில் துறவிகள் இருவர் கழுவேற்றப்பட்டுளர். இச் சிற்பத்திற்கு வலப்புறம் ஒரு சிறிய கோவிலையும் அதன் வலப்புறம் வைகுந்தப் பெருமாள் கோவில் போன்ற பெரிய கோவிலையும் குறிக்கும் சிற்பங்கள் காண்கின்றன. சமணர், பெளத்தர் போன்ற புறச் சமயத்தாரை அழித்து வைணவத்தை நிலை நாட்ட முயன்றதைத்தான் இச்சிற்பங்கள் உணர்த்துகின்றன. இச் சிற்பங்களால் பல்லவமல்லன் நடத்தை நன்கு விளங்குகிறது. இஃது அக்காலத்தை ஒட்டிய செயல்போலும் வென்றவர் கோவிலில் இத்தகைய நிகழ்ச்சிகளைச் சிற்பங்கள் வாயிலாகக் காட்டியிருத்தல் அக்காலத்திற்கு ஏற்றதாக இருந்ததுபோலும்" . - மதுரையைக் கைப்பற்றிய களப்பிரன் என்ற கலியரசன் பிரம்மதேயத்தை அழித்தான் என்பது வேள்விக் குடிப் பட்டயத்தால் அறியலாம். இது சமணன் அல்லது பெளத்தனான அவன் வைதிக சமயத்திற்குச் செய்த கொடுமையாகும். இவ்விலக்கிய-பட்டய-சிற்பச் சான்றுகளை நோக்க, சேக்கிழார் கூறிய சைவர் கொடுமையும் சமணர் கொடுமையும் நடத்திருக்கலாம் எனக் கோடலில் தவறில்லை. தோற்றார் கழுவேறல் அல்லது ஏற்றப்படல் அக்கால நிலைக்குப் பொருந்தியதாகலாம் என்ற தாமஸ் போக்ஸ் கூறியதற்கு ஏற்பவே சம்பந்தர், மிகைபடா வேந்தன் செய்கை விலக்கிடாதிருந்தார் என்று சேக்கிழார் கூறுதல் காணத்தக்கது. எனவே, சேக்கிழார் மேற்சொன்ன கொடுமைகளைத் தாமாகக் கட்டிச் சொன்னவர் அல்லர் என்பது பெறப்படும். - நாயன்மார் காலத்து அடியவர்கள் நாயன்மார் காலத்தில் சிவயோகியர், மாவிரதியர், பயிரவ வேடங்கொண்ட காபாலிகர் முதலியோர் இருந்தனர் என்பதும், அவர்கள் நாயன்மாரால் சிறப்பிக்கப் பெற்றனர் என்பதும் திருநீலகண்டர், மானக்கஞ்சாற்ர்