உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 183 கலித்தொகை 1. மானக்கஞ்சாறர் புராணத்தில் (செ. 11 வரும் மழைருக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி என்ற தொடரின் கருத்தும் வான்தரு கற்பினாள் (செ. 16) அருமழை தரல் வேண்டில் தருகிற்கும் பெருமையளே (செ. 39 என்று கலித்தொகைப் பாக்களில் வரும் தொடர்களின் கருத்தும் ஒன்றுபடல் காண்க. 2. தடுத்தாட்கொண்ட புராணத்துள் காமநோயால் வருந்திய பரவையார் கூறிய பொறையும் நிறையும் இறையும் (சிறிதளவும் தரியா என்ற (செ. 176 தொடரின் கருத்து, பொறையென் வரைத்தன்றிப் பூதுதல் ஈத்த நிறையழி காம நோய் என்ற கலித்தொகைப் பாவின் (138) அடிகளின் கருத்தும் ஒன்றுபடல் காணத்தக்கது. திருக்குறள் சேக்கிழார் ஆண்டுள்ள திருக்குறள் கருத்துக்கள் ஏறத்தாழ ஐம்பதுக்கு மேற்பட்டவை என்னலாம். அவற்றுள் இங்கு மாதிரிக்குச் சில காட்டப்பெறும். 1. அப்பரை நேரே கண்டு பழகாதிருந்தும் அப்பூதியடிகள் அவரிடம் பெருமதிப்புக் கொண்டு அவரையே எப்பொழுதும் நினைந்திருந்தனர் என்பதைச் சேக்கிழார் காண்டகைமை இன்றியுமுன் கலந்தபெருங் கேண்மையினர். (செ203 எனக்கூறுதல் புணர்ச்சிபழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்ற குறட் கருத்தே அன்றோ? 2. சுந்தரர் சங்கிலியாருடன் புதுமணம் துய்த்த நிலையைச் சேக்கிழார், 'கண்டுகேட்டுண் டுயிர்த்துற்றமர்ந்திருந்தார் காதலினால்' என்று ஏயர்கோன், 267) கூறியிருத்தல் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஜம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள என்ற குறளைப் படித்தன்றோ?