பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரும் அவர் காலமும் 23 இங்ங்ணம் சேக்கிழாரும் ஒட்டக்கூத்தரும் குறிப்பிட்ட கருத்துக்கள் ஒன்றுபடுதலைக் காணின், சேக்கிழார் குறித்த அநபாயன் இரண்டாம் குலோத்துங்கனே என்பது ஐயமற விளங்குகிறதன்றோ? தண்டியலங்கார மேற்கோள் பாக்களில் எட்டுப் பாடல்கள் அநபாயனைப் பற்றியே வருகின்றன. அவை அவனுடைய வள்ளற்றன்மை, செங்கோன்மை, பேரரசுத்தன்மை ஆகிய மூன்றையும் பெரிய புராணத்தைப் போலவும் உலா, பிள்ளைத் தமிழ், பரணி போலவும் விளக்கமாகக் கூறுகின்றன. அப்பாடல்களுள் இறுதிப்பாடல் அநபாயனை வாழ்த்துவதாக முடிவதால், தண்டியலங்கார மூலமும் உரையுமோ அல்லது உரை மட்டுமோ இவ்விரண்டாம் குலோத்துங்கன் காலத்தது எனக் கூறலாம். இங்குப் பெரிய புராணம் குறிக்கும் பத்து இடங்களிலும் சிறப்புச் சொல்லாக 'அநபாயன் என்பதே ஆளப்பட்டிருத்தலும், தண்டியலங்காரம் குறிக்கும் மேற்கோட் செய்யுட்கள் எட்டிலும் அநபாயன் என்ற சொல் ஒன்றே ஆளப்பட்டிருத்தலும் காணச் சேக்கிழார் காலத்தரசன் அநபாயன் என்ற பெயர் ஒன்றையே தனது சிறப்புப் பெயராகக் கொண்டவன் என்பது நன்கு தெரிகின்றது. இங்ங்ணம் கொண்டவன் கூத்தரால் புகழப்பெற்ற இரண்டாங் குலோத்துங்கனே என்பது மேற்காட்டிய ஒற்றுமையால் நன்கு விளக்கமாதல் 恶{夺否T$。 இனி, இவ்விரு புலவரும் குறித்த செய்திகள் அனைத்திற்கும் இக்குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் சான்று பகர்ந்துநிற்கும் அருமைப்பாட்டைக் கீழே காண்க :