உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசராசபுரத்துச் சிற்பங்கள் 267 குறிப்புகள் 1. திருத்தொண்டர் திருவந்தாதி, செ.8, 2. செ. 189.201; 1.9, 3. செந்தமிழ் 4. pp. 127-134 9. இராசராசபுரத்துச் சிற்பங்கள் (கி.பி. 1146-1173) தஞ்சைக் கோட்டத்துத் தாராசுரம் எனப்படும் ஊர் சோழர் காலத்தில் இராசராசபுரம் எனப்பட்டது இப்பெயரே பலவாறு கெட்டுத் தாராசுரம் எனப்படுகிறது. இங்குள்ள வியத்தகு வேலைப்பாடமைந்த சிவன் கோவில் இரண்டாம் இராசராசனாற் (கி.பி. 1146-173-இல் கட்டப்பட்டது. அக் கோவிலில் இவன் சிலையும் இவன் மனைவி சிலையும் இருத்தலைக் காணலாம். இந்த இராசராசன் சேக்கிழார் பெரிய புராணம் பாடுகையில் இளவரசனாக இருந்தவன். இவன் சிறந்த சிவ பக்தன் என்பது இவன் காலத்தில் நிகழ்ந்த சைவத் திருப்பணிகளைக் கல்வெட்டுகள் கொண்டு அறியலாம். இவன் கட்டிய இராசராச புரத்துக் கோவிலில் உள்ள சிவபிரான் இறையிடப் புறச் சுவர்களில் நாயன்மார் வரலாறுகள் சிற்பங்கள் வாயிலாகக் காட்சி அளிக்கின்றன. ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் நிகழ்ச்சி எழுதப்பட்டுள்ளது. இச் சிற்பச் செய்திகளும் சிற்பங்களும் கல்வெட்டறிஞரால் தமது ஆண்டு அறிக்கையில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளன: வடபுறச் சுவரில் உள்ள சிற்பங்களும் கல்வெட்டுகளும் 1. அவிநாசியாண்டார் முதலைவாய்ப் பிள்ளை திரு முருகன் பூண்டியில் பணம் பெற்றபடி உடைய நம்பியை வேடர் வழிப்பறித்தபடி உடைய நம்பிக்கு ஒலை வென்று அருளியபடி 5. உடைய நம்பியை ஆண்டுகொண்டருளினட்டி 6 — ஆவண ஒலை காட்டினபடி 7. உடைய நம்பி எழுந்தருளுகிறார் - (மூவர் மேல் நோக்கி வணங்கல்அவர் பக்கலில் ஆடு, சிறுவர் தோற்றம்) 8. இசை ஞானியார்