பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பெரியபுராண ஆராய்ச்சி ஆயின், நந்திவர்மன் செய்த சிவத் தொண்டுகள் பலவாகும் : 1. இவன் பட்டம்பெற்ற 6ஆம் ஆண்டில் பொன்னேரிக்கடுத்த திருக்காட்டுப்பள்ளியில் புதிதாய்க் கட்டப்பட்ட சிவன் கோவிலுக்கு அச்சிற்றுரையே தேவதானமாக விட்டான்." இதனைக் கூற எழுந்ததே வேலூர்ப்பாளையப் பட்டயம். 2. இவன் திருவதிகை வீரட்டானேசர் முன் விளக்கெரிக்க 100 கழஞ்சு பொன் அளித்தான்." 3. “குமார மார்த்தாண்டன்” என்ற தன் பெயர் கொண்ட விளக்கு ஒன்றைத் திருவிடை மருதூர்ச் சிவனார்க்களித்தான்." திருவொற்றியூர்ச் சிவன் கோவிலில் விளக்கு வைக்க பொன் தந்தான் திருத்தவத்துறை மகாதேவர் கோவிலில் விளக்கெரிக்கப் பொன் அளித்தான்' திருக்கடைமுடி மகாதேவர்க்கு நிலதானம் செய்தான்." திருப்பதிகம் கோவில்களில் ஒதப்பெற்றது என்பதை முதன்முதல் அறிவிக்கும் திருவல்லம் கல்வெட்டு' இப் பெருமகன் காலத்தில் எழுந்ததே ஆகும். 6ஆம் குறிப்பு சேக்கிழார் கூற்றிலிருந்து கழற்சிங்கனது பட்டத்தரசி செய்த தவறுகள் இரண்டு என்பது புலனாகும். அவையாவன: 1. கணவன் பூங்கோயிற் பெருமானை வணங்கும் பொழுது உடன் இருந்து வணங்காமை. கோவிலுக்குச் செல்லும் கணவனும் மனைவியும் சேர்ந்தே வணங்குதல் யாண்டும் எக்காலத்தும் உள்ள முறைமையன்றோ? இவ்வியற்கைக்கு மாறுபட்ட செயல் இவ்வரசியிடம் காணப்படல் நோக்கத்தக்கது. - 2. பூமாலை கட்டும் மண்டபத்தின் பக்கத்தில் இருந்த புதுமலர் இறைவனுக்கு மாலை கட்டற்குரியது என்பதனையோ கோவிலில் உள்ள மலரை மோத்தல் ஆகாது என்பதனையோ அறியாமல் இவள் மலரை மோந்தமை பெருங் குற்றமாகும். இவ்விரு குற்றங்களையும் செய்தவள் இராச சிங்கன் பட்டத்தரசியாக இருத்தல் கூடுமா? நந்திவர்மன் பட்டத்தரசியாக இருத்தல் கூடுமா? என்பது இங்கு ஆராய வேண்டுவதாகும். 1. இராச சிங்கன் பட்டத்தரசி ரங்கபதாகை என்பவள். அவ்ஸ் சிவனுக்கு அமைந்த பார்வதிபோல இராச சிம்மனுக்கமைந்த பத்தினி. அவள் கயில்ாசநாதர் கோவிலில் உள்ள பல சிறு கோவில்களில் ஒன்றைக் கட்டியவள்" எனவே, இவள் சிறந்த சைவப் பெண்மணி என்பது நன்கு விளங்கும்.