பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பெரியபுராண ஆராய்ச்சி கி.பி. 840-865 என்று கூறமுடியாது என்பது நினைவில் இருத்துதல் நலம். இந்நினைவுடன் கீழ்வரும் செய்திகளைக் கருத்துன்றிக் கவனிப்பது நல்லது. 1. சேரமான் பெருமாள் ஆட்சி விட்டுச்சென்ற காலம் கி.பி. 825 என்பது சேரநாட்டில் கூறப்படும் வழக்காகும். இவ்வாண்டு தவிர வேறு ஆண்டு, குறிப்பிடப்படாமையும் நோக்கத்தக்கது. இவ்வாண்டு கொல்லம் ஆண்டின் தொடக்கமாகும். கொல்லம் ஆண்டிற்கு வேறு காரணம் கூறப்படினும், நெடுநாள் வழக்காகிய இதுவும் ஒரு காரணமாகலாம் என்று கொள்வதில் இழுக்கொன்றும் இல்லை. இவ்வழக்கு உண்மை எனக்கொள்ளின், சேரமான் காலம் ஏறத்தாழக் கி.பி. 825-க்கு அண்மையது என்னலாம். எனவே, சேரமான் தோழர் ஆகிய சுந்தரர் காலமும் அதுவேயாகும். இக்காலம் ஏறத்தாழ நமது நந்திவர்மன் காலத்தோடு ஒத்துவருதல் காண்க. 2. சுந்தரர் நமது வடதிருமுல்லைவாயிற் பதிகத்தில், சிவபிரான் தொண்டைமான்' களிற்றை முல்லைக் கொடியாற் கட்டிவிட்டு, அச்செயலால் தொண்டைமாற்கு எல்லையில்லாத இன்பம் உண்டாக்கினான்" என்றொரு நிகழ்ச்சியைக் குறித்துள்ளார். இந்நிகழ்ச்சி இரண்டாம் நந்திவர்மனுடைய (கி.பி. 727-790 பட்டவர்த்தனம் என்ற மதம் பிடித்த யானையைப்பற்றியதாகலாம் என்று கல்வெட்டறிஞர் கருதுகின்றனர். இஃது உண்மையாயின், இதனைக் குறிக்கும் சுந்தரர் காலம் மூன்றாம் நந்திவர்மன் காலமாகவே இருத்தல் வேண்டும். என்ன? இரண்டாம் நந்திவர்மனை அடுத்துப் பட்டம்பெற்ற சைவன் மூன்றாம் நந்திவர்மனே ஆதலால் என்க. 3. சேரமான் சிறந்த கொடைவள்ளல் என்பது கார் கொண்ட கொடை” என்று சுந்தரர் குறித்தலால் அறியப்படும். அச் சேரமானிடம் மதுரைப் பாணபத்திரர் இறைவனது பாசுரத்தைக் காட்டிப் பொருள் பெற்றார். அப்பொழுது மதுரை மன்னனாக இருந்தவன் வரகுணன் என்று திருவிளையாடல் குறிக்கிறது. கல்வெட்டுக்களில் இரண்டு வரகுணர் காண்கின்றனர். ஒருவன் காலம் கி.பி. 800 - 830 மற்றவன் காலம் கி.பி. 862 - 880 பின்னவனே திருப்புறம்பயத்தில் அபராசித பல்லவனுடன் போரிட்டுத் திருவிடை மருதூரில் தங்கிச் சிவபிரானிடம் அளவிறந்த பக்தி செலுத்தியவன். இவனது பக்திச் சிறப்பை மாணிக்கவாசகர், பட்டினத்தார் முதலியோார் பாராட்டியுள்ளனர். இச்சீரிய சிவத்தொண்டனைச் சுந்தரர் பாடாததால், அவர் இவனுக்கு முற்பட்டவராகலாம். ஆகவே, சுந்தரர் ஏறத்தாழ முதல் வரகுணன் (கி.பி. 800-830) காலத்தவராதல் வேண்டும்." இக்காலமும் ஏறக்குறைய நந்திவர்மன் காலத்தோடு ஒத்துவருதல் காண்க 4. அப்பர் 81 ஆண்டுகள் வாழ்ந்தவர் எனக் கொள்வதாலும், அவர் Líð) ஆண்டுகள் சமணசமயத்தில் ஈடுபட்டிருந்து பிறகே சைவரானார் என்பதனாலும், சம்பந்தர் அவரது முதுமைநோக்கி அப்பரே என