பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நம்பியாண்டார் நம்பி காலமும் திருமுறைத் தொகுப்பும் திருமுறைத் தொகுப்பு திருமுறை கண்ட புராணம் இதில் பல பொருந்தாக் கூற்றுகள் உண்டென்பது முதற்பகுதியில் நன்கு விளக்கப்பட்டது. ஆதலின், இங்கு இப்புராணச் செய்திகள் அனைத்தும் கூறாமல், நமது ஆராய்ச்சிக்கு வேண்டும் செய்திகள் மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்வோம்: - 1. நம்பி இராசராசன் காலத்தவர். 2. இராசராச சோழனிடம் வந்த சிவனடியார் ஒவ்வொருவரும் தேவார்த்துள் ஒரு பதிகம் ஒதிச்சென்றனர்; ஒருவரே இரண்டு அல்லது மூன்று தலங்களின் பதிகங்கள் சொல்லக்கூடவில்லை.) - 3. இராசராசன், திருமுறைகள் கூத்தப்பிரான் கோவிலில் இருப்பதை நம்பியாண்டார் நம்பி வாயிலாக அறிந்தான்; அவற்றை வெளிப்படுத்தி, நம்பியைக் கொண்டு முறைப்படுத்தினான். 4. சில ஏடுகள் அழிந்து ஒழிந்தன. 5. நம்பி 11 திருமுறைகளைத் தொகுத்து முடித்தார். நம்பி இராசராசன் காலத்தவர் திருமுறை கண்ட புராண ஆசிரியர், இராசராசனே நம்பி காலத்தவன் என்று தெளிவாகக் கூறியுள்ளார். எனினும், நம்பி தாம் பாடிய பல நூல்களில் ஓரிடத்திலேனும் இவனைக் குறிப்பிட்டிருப்பின், இக்கூற்றை உண்மை என்று நம்பலாம். நம்பி, தாம்பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில், புகழ்ச்சோழர், 米 宗 :: சிங்கள நாடு பொடிபடுத்த குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்' என்று கூறுதல் நோக்கத்தக்கது. இதனில் வந்துள்ள சிங்கள நாடு பொடிபடுத்தவன் எவனோ அவனே நம்பி காலத்தவன் ஆவன். புலவர்