பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - பெரியபுராண ஆராய்ச்சி கோச்செங்கணான் காலம் வேள்விக்குடிப் பட்டயப்படி சங்க காலத்திற்குப் பிறகு பாண்டியநாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது. அக்களப்பிரர் கையிலிருந்தே கடுங்கோன் தன் நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது. ஆயின், சோழநாடு எவ்வளவு காலம் களப்பிரர் கையில் இருந்தது? 'கி.பி. 5ஆம் நூற்றாண்டு முற்பாதியில் புத்ததத்தர் குறித்த அச்சுதனுக்குப் பிறகு சோழ நாட்டையாண்ட களப்பிரர் யார்? என்பன தெரியவில்லை. கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இடையில் குமார விஷ்ணு என்ற பல்லவன் காஞ்சியை மீளவும் கைப்பற்றினான். அவன் மகனான புத்தவர்மன் கடல் போன்ற சோழர் சேனைக்கு வடவைத் தீப் போன்றவன்' என்ற வேலூர்ப் பாளையப் பட்டயம் பகர்கின்றது. கி.பி. 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவனாகக் கருதப்படும் முதலாம் நந்திவர்மன் விஜய - காஞ்சிபுரத்திலிருந்து பட்டயம் விடுத்துள்ளான். ஏறத்தாழக் கி.பி. 575இல் சிம்ம விஷ்ணு என்ற பல்லவன் மீட்டும் காஞ்சியைக் கைப்பற்றினான்; சோழர், மழவர் களப்பிரர் முதலியோரை வென்று காவிரிக்கரைவரை பல்லவ நாட்டை விரிவாக்கினான் என்பது வேலூர்ப் பாளையப் பட்டயமும் கசாக்குடிப் பட்டயமும் குறிக்கும் செய்தியாகும்" இக்குறிப்புகளால், முன் சொன்ன குமார விஷ்ணுவுக்குப் பிறகும் சிம்மவிஷ்ணுக்கு முன்பும் காஞ்சி பல்லவர் வசம் இல்லாது அடிக்கடி கைம்மாறியதாக நினைக்க இடமுண்டு. அச்சுத விக்கந்தற்குப் பிறகு, சிம்மவிஷ்ணு சோணாட்டை வெல்லும்வரை களப்பிரரே சோணாட்டை ஆண்டனர் என்பதற்குரிய சான்றும் இல்லை. மேற்குறித்த பல்லவர் செய்திகளைக் காண்கையில், சிம்ம விஷ்ணுவுக்கு முற்பட்ட பல்லவர் நிலையாகக் காஞ்சியில் தங்கித் தொண்டை மண்டலத்தை ஆண்டதாகத் தெரியவில்லை. கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இடையில் புத்தவர்மன் கடல்போன்ற சோழர் சேனையோடு போரிட வேண்டியவன் ஆனான். ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் சிம்மவிஷ்ணு சோழரை வென்றான். இவற்றுள் புத்தவர்மன் செய்த போரைக்காணின் அச்சுதற்குப் பிறகு கி.பி. 5ஆம் நூற்றாண்டில், சோழர் கடல் போன்ற சேனையை வைத்திருந்தனர்; அவர் பல்லவனுடன் போரிட்டனர் என்பன தெரிகின்றன. இங்ங்னம் கடல் போன்ற சேனையை வைத்துக் கொண்டிருந்த சோழன், சங்க காலத்திற்குப் பிற்பட்டவனாகக் கருதத்தக்க கோச்சோழன் ஆகலாம். அவன் பல அரசரை முறியடித்தவன் பெரிய யானைப்படை, குதிரைப் படைகளை உடையவன் என்பன களவழியாலும் திருமங்கையாழ்வார் பாசுரங்களாலும் தெரிகின்றன. இச்சோழன், தன் நாட்டைப் பற்றிக் கொண்ட களப்பிரரை அடக்கிப் பின் வடபுலத்திருந்த புத்தவர்மனுடன் போரிட்டு வெற்றிகண்டனன் போலும் இவனை வடபுலக்கோன்' என்று திருமங்கையார் குறித்தமை இதுபற்றிப் போலும் இங்ங்னமாகக் கொள்ளின், கோச்செங்கணான் காலம் புத்தவர்மன் காலமாகிய கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்னலாம்.