பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பெரியபுராண ஆராய்ச்சி சீற்றத்துக்கு அஞ்சிச் சேரநாடு புக்கனர் என்று சேக்கிழார் கூறல் கவனிக்கத்தக்கது". இதனால் தில்லைவாழ் அந்தணர் கூற்றுவ நாயனார்க்கு அஞ்சத்தக்க நிலையில் சோழர் வலியற்றிருந்தனர் என்பது தெளிவாகிறது. இந்நிலை மேற் சொன்ன 5, 6ஆம் நூற்றாண்டுகளில் இருந்ததெனக் கோடலே தக்கது". o 4. மூர்த்தி நாயனார் . இவர் மதுரை வணிகர் : சிறந்த சிவபக்தர் : சிவனார்க்குச் சந்தனம் அரைத்துக் கொடுத்தவர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டைக் கவர்ந்த களப்பிர அரசன் புறச்சமயச் சார்புடையவன். அவன் இவர்க்குச் சந்தனம் கிடைக்காதபடி செய்தான்". இக்குறிப்பால் இவர் நாம் முன்சொன்ன அச்சுதன் காலத்தவர் என்பது புலனாகிறது. 5. ஐயடிகள் காடவர்கோன் . இவர் சிறந்த வடமொழிப் புலவர் : தமிழ்ப் புலவர் மகனிடன் அரசை ஒப்பித்து, சிவத் தளியாத்திரை செய்து, தலத்துக்கொரு வெண்பாப் பாடினவர். இவர் வடமொழிப் புராணத்தில் சிம்ஹாங்க, பதசிம்ஹா, பஞ்சபதசிம்ஹா (Simhanka, Padasimha, Panchapadasimha) என்ற பெயர்களை உடையவராகக் காண்கிறார். மேலும் இவர் மகன் பீமவர்மன் என்று அந்நூல் கூறுகிறது. பல்லவர் பட்டியலிற் பீமவர்மன், சிம்மவிஷ்ணு இவர் தம் தந்தை மூன்றாம் சிம்மவர்மன் என்பது காண்கிறது. எனவே, இவர் மூன்றாம் சிம்மவர்மனாகலாம் என்பது அறிஞர் கருத்து" அது பொருத்தமாயின், சிம்மவிஷ்ணுவின் (கி.பி. 575 - 6.15) தந்தையாரான இவர் காலம் ஏறத்தாழக் கி.பி. 550-575 என்னலாம். 6. திருமூலர் இவர் எழுதியுள்ள திருமந்திரத்தைக் கண்டு ஆராயின், இவரது காலம் ஏறக்குறையக் கி.பி. 300 - 500 என்பர் ஆராய்ச்சியாளர்". 7. காரைக்கால் அம்மையார் . இவர் தலையால் நடந்த பதியாதலின், திருவாலங்காட்டைச் சம்பந்தர் மிதிக்க அஞ்சி, ஊரின் வெளிப்புறத்தில் தங்கினார்" என்று சேக்கிழார் கூறலும் அதற்கு ஏற்பச் சம்பந்தர் பாடிய திருவாலங்காட்டுப் பதிகத்தின் முதற்செய்யுள் அதனைக் குறிப்பாக உணர்த்தலும்" நோக்க, இவ்வம்மையார் சம்பந்தர்க்கு முற்பட்டவர் என்பது தெரிகிறது. எனவே இவரும் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் §T&Töösöössis). இதுகாறும் கூறியவற்றால், அப்பர். சம்பந்தராற் பாடப் பெற்ற பதின்மரும், வரலாறுகொண்டு அவர்க்கு முற்பட்டவராகக் கொள்ளப்பெற்ற எழுவரும் கி.பி. 5, 6ஆம் நூற்றாண்டினர் என்பது நன்கு விளங்கும். 8. சுந்தரர் காலத்து நாயன்மார் : சுந்தரர் தேவாரத்தாலும் நம்பியின் அந்தாதியாலும் தாம் கேட்டறிந்த செய்திகளாலும் சுந்தரர் காலத்தவர் 13 பேர் என்று சேக்கிழார் கூறினார். அவராவர் - (1 சுந்தரர், (2) அவர் தந்தையார் சடையனார், (3) தாயார் இசைஞானியார், (4) அவரை வளர்த்த நரசிங்க முனையரையர், (5) அவரைத் தொகை பாடச் செய்த விறல் மிண்ட நாயனார்,