பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பெரியபுராண ஆராய்ச்சி வரலாறுகள் கோவில்களில் சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும் காட்சி அளிக்கத் தொடங்கின. இந்த முன்னேற்ற ஏற்பாடுகளில் தலைசிறந்தது இராசராசன் நம்பிகளைக்கொண்டு முதல் ஏழு திருமுறைகளை முறைப்படுத்தியதே ஆகும். - நம்பிகள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியவர்மீது பல சிறு நூல்களைப் பாடித் தாம் அறிந்த அளவு அவர்களைப் பற்றிய குறிப்புக்களைக் குறித்துச் சென்றனர்; தம் காலத்தில் வழங்கிவந்த அறுபத்துமூவருடைய சிறப்புடைச் செயல்களைத் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலில் குறித்தனர். நம்பிக்குப் பிறகு இராசேந்திரன் முதலிய அரசரால் நாயன்மார் வரலாறுகள் செப்புச் சிலைகள், கற்சிலைகள் ஒவியங்கள் இவற்றின் வாயிலாகப் பரப்பப்பட்டன. அந்தந்த நாயன்மார் வாழ்ந்த ஊர்க்கோவில்களில் அவர்க்கு விழாக்கள் நடைபெற்றன. அவர்கள் பூசைக்கும் விழாக்கட்கும் நிலதானம் செய்யப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் சோழர் காலக் கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. எனவே, சேழக்கிழார் திருத்தொண்டர்புராணம் பாடுவதற்கு முன்னரே, 1. நாயன்மார் வரலாறுகளை மக்கள் ஓரளவு அறிந்திருந்தனர் ; 2. அவர்களுடைய பெயர்களை மக்கள் வைத்து மகிழ்ந்தனர் ; 3. நாயன்மார் வரலாற்று நிகழ்ச்சிகள் ஓவியங்கள், சிற்பங்கள் வாயிலாகக் காட்சி அளித்தன ; 4. திருமுறைகள் நாடெங்கும் ஓதப்பட்டு வந்தன ; 5. நாயன்மார் உருவச்சிலைகட்குப் ಟ್ರಣ54 விழாவும் நடைபெற்றன ; 6. தில்லை உலாப் போன்ற சோழர்கால இலக்கிய நூல்களில் நாயன்மாருடைய செயற்கரிய செயல்கள் பாராட்டப்பட்டன. இவ்வுண்மைகளை அறியத் துணைபுரிவன யாவும் இவ்வாராய்ச்சிக்கு உரிய மூலங்கள் ஆகும். அவையாவன: 1. பல்லவர் காலத் தென்னாட்டு நிலையை விளக்கும் வரலாற்று நூல்கள்' பல்லவர், பாண்டியர், சாளுக்கியர் கல்வெட்டுக்களும் பட்டயங்களும், பல்லவர் கால வடமொழி நூல்கள், பல்லவர் காலத் தமிழ் நூல்கள், பல்லவர் காலத்துக் கோவில்கள், சேக்கிழார் காலம்வரை வெளிவந்த சோழர் கல்வெட்டுக்கள், பட்டயங்கள், சோழர் காலத் தமிழ் நூல்கள்,