பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பெரிய புராண விளக்கம்

இந்தப் பாடல் குளகம். அந்தம்-முடிவு. இல்-இல்லாத: கடைக்குறை. சீர்-சீர்த்தியைப் பெற்ற. அனிந்திதைபார்வதியம்மையின் சேடியாகிய அணிந்திதை என்ற திருநாமத்தைப் பெற்ற பெண்மணி. ஆய்-அழகிய குழல்கூந்தலையும். கந்தம்-நறுமணம் கமழும். மாலை-மலர் களைக் கட்டிய மாலையையும் பெற்ற. க்: சந்தி. கமலினிபார்வதி தேவியின் மற்றொரு சேடியாகிய கமலினி என்னும் திருநாமத்தைக் கொண்ட பெண்மணி. என்பவர்-என்னும் பெண்மணிகள்: ஒருமை பன்மை மயக்கம். கொந்து-கொத் துக்கள்: ஒருமை பன்மை மயக்கம். கொண்ட-பெற்ற. திருஅழகிய. மலர்-பூக்களை; ஒருமை பன்மை மயக்கம். கொய் வழி-பறிக்கும் சமயத்தில். வந்து-ஆலாலசுத்தரன் அந்த நந்தனவனத்திற்கு வந்து.வானவர்-தேவலோகத்தில்வாழும் தேவர்களுடைய ஒருமை பன்மை மயக்கம். சசர்-கடவுள .ராகிய கைலாசபதியார். அருள்-வழங்கும் திருவருள். எனஎன்று கூறும்படி இடைக்குறை. . . . . . . - .

அடுத்து வரும் 25-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பெருமையைப் பெற்ற தவத்தைப் புரிந்த தமிழ் நாட்டில் விளங்கும் தெற்குத் திசையில் உள்ள ஊர்களில் வாழும் மக்கள் நல்வாழ்வைப் பெறவும், குற்றம் இல்லாத திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தைப் பாடி வழங்கியருளவும் திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளப் போகிறவராகிய ஆலால சுந்தரர் அந்தப் பெண்மணிகளின் மேல் தம்முடைய திருவுள்ளத்தைச் செலுத்தக் காதலைப் பெற்ற அந்த இரண்டு பெண்மணிகளும் அவருடைய பார்வை .யில் அகப்பட்டார்கள்.' பாடல் வருமாறு:

மாத வம்செய்த தென்திசை வாழ்ந்திடத், திதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்

- வார்.அவர் மேல்மன்ம்போக்கிடக்