பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு - 149

தல விநாயகப் பெருமானுடைய திருநாமம் ஆதி விநாயகர். சுந்தரமூர்த்தி நாயனார், காவிரியாற்றின் தென் கரையிலிருந்து ஆற்றில் மிக்க வெள்ளம் ஓடியதால், நமக் கடிகளாகிய அடிகள்' என்ற திருப்பதிகத்தைப் பாடியருளி னார். அதில் வரும் முதற் பாசுரம் வருமாறு: ... "

"பாறு தாங்கிய காடரோபடு தலையரோ மலைப் பாவையோ கூறு தாங்கிய குடிகரோ குழைக்காதரோ குறுங்கோட்டிள

ஏறு தாங்கிய கொடிய ரோசுடு Quru8 ఏఐ ఆ - - - பிறை

ஆறு தாங்கிய சடைய ரோமக் கடிகளாகிய அடிகளே.” இதை அந்த நாயுனார் பாடி அழைத்தபோது ஆதி விநாயகர், ஒலம், ஒலம்’ என்று திருவாய் மலர்ந்தருளிய தாக ஆன்றோர் கூறுவர். இந்த விநாயகருக்கு அருகில் ஆட்கொண்டார் சந்நிதி என்ற ஒன்று உண்டு. ஓர் அந்தணச். சிறுவனை யமன் தொடர்ந்து வந்ததாகவும் பஞ்சநதீசுவரர் சோதி வடிவத்தோடு தோன்றி ஆட்கொண்டமையால் அவருடைய சந்நிதிக்கு எதிரில் ஒரு சிறு குழி உண்டாக்கி அதில் குங்கிலியத்தைப் போட்டுக் கொண்டு வருவதாகவும் கூறுவர். பலர் பிரார்த்தனை புரிந்து அந்தக் குழியில் குங்கிலியத்தை இடுகிறார்கள். இந்திரன், வாலி முதலியவர் கள் வழிபட்ட தலம் இது, இந்திரன் உணர்ந்து பணி எந்தையிடம். வாலியார் வணங்கி ஏத்தும் திருவையா - றமர்ந்த தேன். என்பவை தேவார்த்தில் வருபவை. இந்தத் தலத்தைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு:

"எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணிதவிர்த்து

வழுவா மருத்துவம் ஆவன மாகாகக்குழிவாய் விழுவாரவர்தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்கஅன்போ டழுவார்க்கமுதங்கள் காண்கஐ யாறன் அடித்தலமே.” இந்தத் தலத்தைப் பற்றித் தக்க ராகம், வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, இந்தளம் என்னும் பண்களில்