பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பெரிய புராண விளக்கம்

பிக்கக் களைகளைக் களைந்து எறியும் இழிகுலப் பெண்க ளாகிய பள்ளிகள் குளிர்ச்சியான முத்துக்களை உமிழும் சங்குப் பூச்சிகளை இடறிக் கொண்டு தங்களுடைய இடுப்புக் கள் தளர்ச்சியை அடைந்து சோர்வைப் பெறுவார்கள் வண்டுகள் மொய்த்து அலையும் தங்களுடைய கூந்தல்கள் அசையும் வண்ணம் மெத்தென்ற நடைய்ோடு வயல்களில் உள்ள வரப்புக்களை அடைவார்கள். பாடல் வருமாறு:

"மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள் விரியக்

கண்டுழவர் பதம்காட்டக் களைகளையும் கடைசியர்கள் தண்டரளம் சொரியனிலம் இடறியிடை தளர்ந்தசைவான் வண்டலையும் குழல்அலைய மடகடையின் வரம்பனை ,

. ፴፱፻፹, மண்டு-மிகுதியாகப் பாய்ந்த, புனல்-காவிரி ஆற்றில் ஒடிய நீர். பரந்த-பரவிய. வயல்-வயல்களில்; ஒருமை பன்மை மயக்கம். வளர்-வளரும். முதலின்-நெற்பயிர்க ளாகிய முதல்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். சுருள் -சுருள்கள் ஒருமை பன்மை மயக்கம். விரிய-விரிவை அடைய. க்: சந்தி. கண்டு-அதைப் பார்த்து. உழவர்-உழ வர்கள்; ஒருமை பன்மை மயக்கம். பதம்-களைகளைக் களை பும் பக்குவத்தை, காட்ட-காண்பிக்க. க்சந்தி, களைகளைகளை ஒருமை பன்மை மயக்கம். களையும்-பிடுங்கி, எறியும். கடைசியர்கள்-இழிகுலப் பெண்களாகிய பள்ளி' கள். தண்-குளிர்ச்சியைப் பெற்ற தரளம்-முத்துக்களைச் ஒருமை பன்மை மயக்கம். சொரி-உமிழும். பணிலம்சங்குப் பூச்சிகளை ஒருமை பன்மை மயக்கம். இடறி'தங்கள் கால்கள் இடறி. இடை-தங்களுடைய இருப் புக்கள், ஒருமை பன்மை மயக்கம் தளர்ந்து-தளர்ச்சியை அடைந்து. அசைவார்-சோர்வை அடைவார்கள் ஒருமை பன்மை மயக்கம். வண்டு-வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். அலையும்-மொய்த்து அலையும். குழல்-தங்க ளுடைய கூந்தல்கள்: ஒருமை பன்மை மயக்கம். அலையஅசையும் வண்ணம்.மடநடையின்-மெத்தென்ற நடையோடு.