பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 239:

கலை, பல-பலவாகிய அறுபத்து நான்கு கலைகளை; கலை: ஒருமை பன்மை மயக்கம். அந்தக் கலைகளாவன: அக்கர இலக்கணம், இங்கிதம், கணிதம், வேதம், புராணம், வியா கரணம், நீதி சாத்திரம், சோதிட நூல், தரும சாத்திரம், யோக நூல், மந்திர சாத்திரம், சகுன நூல், சிற்ப சாத்திரம், மருத்துவ நூல், உருவ சாத்திரம், இதிகாசம், காவியம், அலங்கார நூல், மதுர பாஷணம், நாடகம், நிருத்தம், சத்தப்பிரமம், வீணை வாசித்தல், வேனுகானம், மிருதங்கம் வாசித்தல், தாளக்கலை, அஸ்திரப்பரீட்சை,கனகப்பரீட்சை, இரதப் பரீட்சை, கஜப்பரீட்சை, குதிரைப் பரீட்சை, இரத்தி னப்பரீட்சை, பூமிப் பரீட்சை, சங்கிராம இலங்கணம், மல் யுத்தம், ஆகருஷணம், உச்சாடனம், விந்துவேஷணம், மதன. சாத்திரம், மோகனம், வசீகரணம், இரசவாதம், காந்தருவ வக்தம், பைபீல வாதம், கவுத்துக வாதம், காதுவாதம், காருடம், நாட்டம், முட்டி, ஆகாயப் பிரவேசம், ஆகாய கமனம், பரகாயப் பிரவேசம், அதிருசியம், இந்திர ஜாலம், மகேந்திர ஜாலம், அக்கினி ஸ்தம்பம், ஜலஸ்தமபம், வாயு ஸ்தம்பம்,திருஷ்டி ஸ்தம்பம், வாக்கு ஸ்தம்பம், சுக்கில ஸ்தம் பம், சகனன ஸ்தம்பம் கட்க ஸ்தம்பம், அவஸ்தைப் பிரயோ கம் என்பவை. திருந்த-திருத்தமாக அமையுமாறு. ஒதிட ஆசிரியர்களிட்ம் கற்றுக்கொண்டு. க்: சந்தி. கவன-வேகமாக, வாம்-தாவி ஒடும். புரவி-குதிரை ஏற்றம்; ஆகுபெயர். யானை-யானை ஏற்றம் ஆகுபெயர். தேர்-தேரை ஓட்டு தல்; ஆகுபெயர். படை-வில், அம்பு, ஈட்டி, வாள் முதலிய ஆயுதங்களைப் பிரயோகம் செய்யும் ஒருமை பன்ம்ை மயக்கம். தொழில்கள்-வேலைகளை கற்று-உரிய ஆதி ரியர்களிடம் பயின்று. ப்: சந்தி. பவம்-இந்த மனிதப் பிறவியை முயன்றதுவும்-அடைந்ததும். பேறே-பாக்கி யமே. என்-என்று கூறும் வண்ணம்: இடைக்குறை. வரும்அமையும். பண்பின்-நல்ல குணங்களில்; ஒருமை பன்மை மயக்கம். மிக்கான்-அந்த இளைஞன் மிகுதியான சிறப்பைட் பெற்று விளங்கினான். -