பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம - - 5 Cr

அருளின்-நடராஜப் பெருமான் வழங்கும்திருவருளினுடைய. நீர்மை-இயல்பையும். த்:சந்தி. திருத்தொண்டு. நாயன்மார் கள் புரிந்த திருத்தொண்டுகளையும்; ஒருமை பன்மை மயக்கம். அறிவரும்- தெரிந்துகொள்வதற்கு உரிய அருமையான அறிவும். தெருள்- தெளிவும். இல்-இல்லாத, கடைக்குறை. நீர்-நீங்கள். இது-இந்தப் பெரியபுராணத்தை. செப்புதற்கு-பாடுவதற்கு. ஆம்-உம்மால் முடியுமோ? இது காகு ஸ்வரம். எனின்- என்று யாரேனும் கேட்டால்; இடைக்குறை. வெருள்-மயக்கம். இல்-இல்லாத, கடைக்குறை. மெய்ம்மொழி - உண்மையான சொற் றொடராகிய உலகெலாம்' என்பதுை. வான் நிழல் ஆகாயத்திலிருந்து எழுந்த அசரீரி வாக்கு. கூறிய-எடுத்துக் கொடுத்த. பொருளின்-சொற் றொடரால். ஆகும்அடியேனால் பாடுவதற்கு முடியும். என-என்று இடைக் குறை, ப்:சந்தி. புகல்வாம்- அவருக்குக் கூறுவோம். அன்று, ர: இரண்டும் ஈற்றசை நிலைகள்:

இதுவும் சேக்கிழார் கூற்று.

பிறகு வரும்.10-ஆம் பாடல் இந்த நூலின் பெயரைச் சொல்கிறது, அதன் கருத்து வருமாறு:

'இவ்விடத்தில் இந்த நூலினுடைய பெயரைக் கூறினால், இந்தப் பூமண்டலத்தில் பழங்காலம் முதல் தங்கியிருக்கின்ற இரண்டு வகையான இருட்டுக்களுக்குள் மக்களுடைய உள்ளங்களுக்கு உள்ளே சேர்ந்து நின்றதும் பொங்கி எழுவதுமாகிய இருட்டாகிய அறியாமையை மற்ற வெளி இருட்டாகிய இரவு நேரத்தைப் போகச் செய்கின்ற, சிவந்த கிரணங்களை வீசும் சூரியனைப்போலப் போகச் செய்யும் திருத்தொண்டர் புராணம் என்று யாம். கூறுவோம்., பாடல் வருமாறு:

"இங்கிதன் காமம் கூறின்

இவ்வுல கத்து முன்னாள்