பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 69

'விண்னோர்தலைவனே.", "தலையவனாய் உலகுக்கு', "சாம்பர்மெய் பூசும் தலைவா போற்றி.', 'சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன்.', 'சமயமவை ஆறினுக்கும் தலைவன், "வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவன்ை, 'தலைகலனாப்பலிஏற்ற தலைவன்' என்று திருநாவுக்கரசு நாயனாரும், "துறையூர்த் தலைவா.", "உன்றன் தாளே வந்தடைந்தேன் தலைவா.', 'வானோர் தம்மானைத் தலை மகனை.", "வானோர் தலைவா வாய்மூர் மணவாளா..", 'தாயும் தந்தை பல்லுயிர்க்கும்.தாமே ஆய தலைவனார்.", 'ஏழைத் தலைவர் கடவூரில் இறைவர்.', 'தன் அருள் தந்த எம் தலைவனை-' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், சைவா போற்றி தலைவா போற்றி", "தன்மை பிறரால் அறியாத தலைவா', 'மல்ைத்தலைவா ம்லையாள் மணவாள.', 'என்னுயிர்த் தலைவா." என்று மாணிக்க வாசகரும், தலைவ தடுமாறுகின்றேன்.', 'ஆதிமூர்த்தியை அமரர்கள் தலைவனை,', 'வானத் தலைவன் மலைமகள் பங்கன்.' என்று நக்கீர் தேவ நாயனாரும், “காமனை விழித்த மாமுது தலைவா " என்று பட்டினத்துப் பிள்ளையாரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 3-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'இந்த உலகத்தில் இருந்து விளங்கும் கணக்கு இல்லாத சிவத்தலங்களும் பரவிய பிரகாசம் விளங்கும் குளிர்ச் சியைப் பெற்ற தளிர்கள் ஆகவும், எழுந்ததாகிய ஓர் உலகம் என்று வழங்கும் பிரகாசத்தைப் பெற்ற மாணிக்கக் கொடியின்மேல் மலர்கின்ற வெள்ளை நிறத்தை உடைய மலரைப்போல விளங்குவது அந்தப் பெரிய கைலாய மலை. பாடல் வருமாறு:

நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி இலகு தண்தளிர் ஆக எழுந்ததோர் உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல் மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை