பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பெரிய புராண விளக்கம் 10

யிருப்பவை. பொங்கு-பொங்கி எழும். ஒதம்-அலைகள்: ஒருமை பன்மை மயக்கம். கடைநாளில்-இந்தக் கலியுகத்தின் இறுதிக் காலத்தில். வரி-கோடுகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். அரவ-வாசுகி என்னும் பாம்பு, மந்தரம்மந்தர மலையை. சூழ்-சுற்றிக் கட்டிய வடம் போல-கயிற் றைப் போல. வயங்கும்-விளங்கும். ஆல்: ஈற்றசை நிலை.

பின்பு உள்ள 5-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'வளப்பம் பொருந்தியிருக்கும் அந்தச் சீகாழியின் வெளிப்பக்கத்தில் உள்ள வயல்களினுடைய பக்கத்தில் நறுமணம் கமழும் பசுமையாகிய இலைகள் நெருங்கியுள்ள இதழ்கள் விளங்கும் நீரில் மலர்ந்திருக்கும் பக்குவத்தைப் பெற்ற விசாலமாக உள்ள செந்தாமரை மலர்களோடு இடம் விரிந்து நிலவும் நீர் நிரம்பிய சமுத்திரத்தின் மேல் மலர்ச்சியைப் பெற்று உதயமாவதாகிய ஒரு சூரியன் என்று. எண்ணி இளமைப் பருவத்தைக் கொண்ட பல சூரியர்கள் மலர்ச்சியைப் பெற்று உதயமானாற் போல விளங்குபவை பல தடாகங்கள் இருக்கின்றன . பாடல் வருமாறு:

வளம்பயிலும் புறம்பனைப்பால் வாசப்பா சடை

மிடைந்த தளம்பொலியும் புனற்செந்தா மரைச்செவ்வித்

- த.மலரால் களம்பயில் நீர்க் கடல்மலர்வ தொருபரிதி - எனக்கருதி. இளம்பரிதி பலமலர்ந்தாற் போல்பு:உள இலஞ்சிபல.'

வளம்.வளப்பம். பயிலும்-பொருந்தியிருக்கும். புறம் பணைப்பால்-அந்தச் சீகாழிக்கு வெளிப் பக்கத்தில் உள்ள வயல்களினுடைய பக்கத்தில். பணை: ஒருமை பன்மை மயக்கம். வாச-நறுமணம் கமழும். ப்: சந்தி. பாசடைபசுமையாகிய இலைகள் : ஒருமை பன்மை மயக்கம் , மிடைந்த-நெருங்கியுள்ள. தளம்-இதழ்கள்: ஒருமை பன்மை மயக்கம். பொலியும்-விள்ங்கும். புனல்-நீரில். செந்தாமரைச்