பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புாாணம் I{}5

போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல்

லாதெனத் தான் தயார் முனிவுறத் தானெனை ஆண்டவன் காதையார் குழையின்ை கழுமல வளநகர்ப் பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே."

என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளி வேற்றால் உணரலாம். திருநீலகண்டப் பெரும்பாண நாயனார், திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைச் சேர்ந்து அவர் அருளிச் செய்யும் தேவாரத் திருப்பதிகங்களைத் தம்முடைய யாழில் வாசிக்கும் பேற்றைப் பெற்றிருந்த தலம் இது. இந்தச் சிவத்தலத்தில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு ஒரு தனித் திருக்கோயில் உள்ளது. பூரீகாழி, பிரமபுரம், தோணிபுரம், வேணுபுரம், சிரபுரம், புகலி, வேங்குரு, பூந்தராய், புறவம், சண்பை, கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரண்டு திருநாமங்களைப் பெற்ற தலம் இது. பிரமதேவன் வழிபட்டமையால் பிரமபுரம் என வும், தேவர்கள் புகலிடமாகப் புகுந்த காரணத்தால் புகலி எனவும், பிரளய காலத்தில் ஒரு தோணியைப் போலக் டே.லில் அமிழாமல் மிதந்தமையால் தோணிபுரம் எனவும் பெயர்கள் வந்தன. பிரமதேவன் வழிபட்டதைப் புலப்படுத்தித் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடி

யருளிய ஒரு பாசுரம் வருமாறு:

7ரியார் மழுவொன் றேந்தி அங்கை இடுதலை

யே கலனா வரியார் வளையார் ஐயம் வவ்வாய் மாநலம் -

வவ்வுதியே

சரியா நாவின் வேதகிதன் தாமரை நான் முகத்தன் பெரியான் பிரமன் பேணியாண்ட பிரம புரத்தானே.”

சீகாழி கடலின்மேல் மிதந்ததைப் புலப்படுத்தித் திருஞான கம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய

புறநீர்மைப் பன் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: