பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் I 49

பத்தினி. ஆகும்-ஆக விளங்கும். பைம்-பசுமையாகிய தங்கத்தால் செய்திருக்கும். தொடினாள்-கைவளைகளை அணிந்தவளாகிய பெரிய நாயகி. தொடி: ஒருமை பன்மை மயக்கம். திரு.அழகிய முலையின்-கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற்கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்து வழங்கியருளிய. முலை:ஒருமை பன்மை மயக்கம். பால்-பாலின் மணம். அறா-போகாத. மதுர-இனிமையான. மொழி-வார்த்தைகளை அருளிச் செய்யும்; ஒருமை பன்மை மயக்கம், ப் : சந்தி. பவள-பவளங்களைப் போன்ற அதரங் களைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம்: உவம ஆகு பெயர். வாயார்-திருவாயை உடையவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தம்-தம்முடைய. திருமாளிகை வின்கண்-திருமாளிகையில். எழுந்தருளி-எழுந்தருளிச் சென்று. ப் : சந்தி. புகும்-நுழையும். பொழுது-சமயத்தில். சங்க-சங்க லாத்தியங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நாதம். இனிய ஒலியும். அந்தர-ஆகாய, துந்து.பி-துந்துபிகள்: ஒருமை பன்மை மயக்கம். முதலா-முதலாக உள்ள அளவு இல்-அளவு இல்லாத கடைக்குறை. பெருகு-பெருகி எழும். ஒலி-இனிய ஓசை. தழைப்ப-தழைத்து விளங்குமாறு. அணைந்து-தம்முடைய திருமாளிகையை அ ைட ந் து. புக்கார்-அதற்குள் நுழைந்தார்.

அடுத்து உள்ள 99-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம் முடைய பரிசுத்தமாக உள்ள மாணிக்கங்களைப் பதித் திருக்கும் திருமாளிகையில் வீற்றிருந்தருளி அன்றைக்கு இரவு நேரத்தில் பழமையாக உள்ள இனிய ஓசையைப் பெற்ற பெருமையைப் பெற்று விளங்கும் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் ஒன்றாகச் சேர்ந்து கானம் செய்யும் பெருமையைப் பெற்றுத் திகழும் அழகிய தோணியில் நிலை பெற்று அமர்ந்திருந்தவராகிய தோணியப்பருடைய அழகு மருவிய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடி