பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பெரிய புராண விளக்கம்-1).

தள்ளிபள்ளி-திருநளிபள்ளியில், னகர ஒற்று செய்யுளின் ஓசை நோக்கி மிக்கது. உள்ளோர்.வாழும் மக்கள் : ஒருமை பன்மை மயக்கம். தொழுது-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை வணங்கி, திங்கள்-பிறைச் சந்திரனு டைய கொழுந்து அணியும்-கொழுந்தைப் புனைந்து கொண்டிருக்கும். சடையாரை சடாபாரத்தைத் தம் முடைய தலையின் மேற் பெற்றவராகிய நற்றுணையப்பரை, எங்கள்-அடியேங்களுடைய; இது நனிபள்ளியில் போழும் மக்கள் கூறியது. பதியினில்-ஊராகிய நனிபள்ளியில்.கும்பிட் டருள-நற்றுணையப்பரைக் கும்பிட்டருள. அங்கு-அந்தத் திருநனிபள்ளிக்கு. ஏ: அசைநிலை. எழுந்தருள வேண்டும். தேவரீர் எழுந்தருள வேண்டும். என-என்று அந்த மக்கள் வேண்டிக் கொள்ள, இடைக்குறை. இசைந்தருளி-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அந்த வேண்டுகோளுக்கு இணங்கி யருளி. த்: சந்தி. தோணி,சீகாழியில் உள்ள பிரமபுரீசரு டைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின் மேல் விளங்கும் தோணியில். iற்றிருந்தார்-அமர்ந்திருந்தவராகிய தோணி யப்பருடைய. பாதம்-திருவடிகளை ஒருமை பன்மை மயக் கம். தொழும்-வணங்கும். தகைமையால்-பான்மையோடு: உருபு மயக்கம். இறைஞ்சி-வணங்கிவிட்டு. அருள் பெற்று: -அருளும் விடையைப் .ெ ப ற் று க் .ெ க ர எண் டு, ப்: சந்தி. பிற-வேறாக உள்ள. பதியும்.-சிவத்தலங் களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். தொழ-எழுந்தருளி அந்தத் தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக் கும் சிவபெருமான்களை வணங்கும் பொருட்டு. முன்-முன் னால். செல்வார்-அந்த நாயனார் எழுந்தருளுவாரானார்.

அடுத்து வரும் 113-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய திருக்கோயிலில் இருக்கும் கட்டுமலையின் மேல் வீற்றிருக்கும் பெரிய நாயகி யார் தம்முடைய கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற் கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்து அளித்த சிவஞானப் பாலைக் குடித்தருளியவராகிய திருஞான