பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#78 பெரிய புராண விளக்கம்-10

இதழ்: ஒருமை பன்மை மயக்கம். சீறடிகள் திருஞான சமபந்த மூர்த்தி நாயனாருடைய சிறிய திருவடிகள். தரை யின் மீது-தரையின் மேல். போதுவதும்-எழுந்தருளுவதை யும். பிறர்-வேறாக உள்ளவராகிய, ஒருவர்-ஒரு மனிதர். பொறுப்பதுவும்-அந்தத் திருவடிகளைச் சுமப்பதையும். பொறா-சகிக்காத. அன்புபுரி.வாத்ஸல்யத்தைக் கொண்ட. சிந்தை-திருவுள்ளத்தையும். மா-பெருமையைப் பெற்று விளங்கும். தவம்-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாராகிய ஆண் குழந்தையைப் பெறுவதற்காக தவத்தை செய்புரிந்த. தாதையார்-தம்முடைய தந்தையாராகிய சிவபாதி இருதயர். வந்து-அந்த இடத்திற்கு வந்து. எடுத்து-தம்மை எடுத்து. த், சந்தி, தோளின மேல்-தம்முடைய தோள்களின் மேல் அமருமாறு. தோள்: ஒருமை பன்மை மயக்கம். வைத் துக் கொள்ள-தம்முடைய புதல்வரை வைத்துக் கொள்ள. நாதர் தம்முடைய தலைவராகிய பிரமபுரீசருடைய கழல்வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடி களை; ஆகுபெயர். தம்-தம்முடைய முடிமேல்-தலையின் மேல். கொண்ட வைத்துக் கொண்ட கருத்துடன்-எண்ணத். தோடு. போந்தார்-அந்த நாயனார் எழுந்தருளினார்.

பின்பு வரும் 114-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

தேன் மலரும் கொன்றை மலர் மாலையை அணிந்து கோண்டிருப்பவராகிய நற்றுணையப்பர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருநனிபள்ளியை அடை வதற்காக எழுந்தருள்பவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், ஆகாயத்தை அளாவும் மலர்கள் மலர்ந்த பல வகையாகிய மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழில் எனக்கு முன்னால் காட்சியளிப்பது எந்தச் சிவத்தலம்?' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் கேட்டருள மகிழ்ச் சியை அடைந்து, "நீலோற்பல மலர்கள் மலரும் வயல் களைப் பெற்ற திருநனிபள்ளி' என்று தம்முடைய தந்தை யாராகிய சிவபாத இருதயர் கூற அதனைக் கேட்டருளிச் சிவஞானமாகிய விருந்தை உண்டவராகிய திருஞான சம்பந்த