பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 18 s.

உற்றுணர்ந் துருகி ஊறி

உள்கசிவுடைய வர்க்கு

நற்றுணை யாவர் போலும்

நனிபள்ளி அடிக ளாரே."

இந்தத் தலத்தைப் பற்றிச் செந்துருத்திப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

' ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டுகந்து

வான மதிள் அரணம் மலையேசிலை யாவளைத்தான் ஊனமில் காழிதன்னுள் உயிர் ஞானசம்பந்தர்க்கன்று ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் ஊர்நனி -

பள்ளியதே."

பிறகு வரும் 115-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், 'காரைகள் கூகை முல்லை' என்று தொடங்கி நடக்கும் கலைத் தன்மையைச் சேர்ந்திருக்கும் உண்மையைப் புலப் படுத்தும் செய்யுட்களுக்கு உரிய சீர்களைப் பெற்ற இயல் பைக் கொண்ட ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி அந்தத் திருப்பதிகத்திலுள்ள இறுதிப் பாசுரமாகிய திருக்கடைக் காப்பில், 'நாரியோர் பாகர் வைகும் நனிபள்ளி உள்குவார் தம் பேரிடர் கெடுதற் கானை நமது'என்னும் பெருமையை வைத்து அந்த நாயனார் பாடியருளினார். பாடல் வருமாறு:

காரைகள் கூகை முல்லை'

எனநிகழ் கலைசேர் வாய்மைச்

சீரியற் பதிகம் பாடித் .

திருக்கடைக் காப்புத் தன்னில்

நாரியோர் பாகம் வைகும்

நனிபள்ளி உள்கு வார்தம்

பேரிடர் கெடுதற் காணை

கம தெனும் பெருமை வைத்தார்.'