பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பெரிய புராண விளக்கம்.1ே

வைத்துப் பாக்கு மரங்களோடு வாழை மரங்களையும் தட்டு: வைத்து மலர்கள் சேர்ந்த மாலைகளைத் தொங்கவிட்டு பூர்ணகும்பங்களையும் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொண்டு கடைத்தெரு முழுவதும் அலங்காரங்களைச் செய்து தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி தாய னாரை மாமரங்கள் அடைந்து வளர்ந்து நிற்கும் மலர்கள் மலர்ந்த பலவகை மரங்கள் வளர்ந்து நிற்கும் மென்மையான பூம்பொழிலையும் நீர் வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம், ஆலய வளம், விருந்தினரை ஒம்பும் வளம் முதலிய வளங்களைப் பெற்ற தங்களுடைய ஊராகிய தலைச்சங்காட்டுக்கு அந்த நாயனாரை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குள் நுழைந்தார்கள். பாடல் வருமாறு: -

' காவணம் எங்கும் இட்டுக்

கமுகொடு கதலி நாட்டிப்

பூவனை தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்தி

ஆவண வீதி எல்லாம்

அலங்களித் தண்ண லாரை

மாவனை மலர்மென் சோலை

வளம்பதி கொண்டு புக்கார்.'

காவணம்-தலைச்சங்காட்டில் வாழும் அந்தணர்கன்

எல்லாரும் கங்களுடைய ஊரில் பந்தல்களை ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எந்த இடங்களிலும்; ஒருமை. பன்மை ம ய க் கம். இட்டு-கட்டி வைத்து. க், சந்தி.

கமுகொடு-டாக்கு மரங்களோடு; ஒருமை பன்மை மயக்கம். கதலி-வாழை மரங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். நாட்டி-நட்டு வைத்து. ப்: சந்தி. பூ-மலர்கள்: ஒருமை பன்மை மயக்கம். அணை-சேர்ந்த, தாமம்-மாலைகளையும்: ஒருமை பன்மை மயக்கம். தாக்கி-தொங்கவிட்டு, ப்: சந்தி, பூரண கும்பம்-பூரண கும்பங்களை ஒருமை பன்மை மயக் கம். பூரண கும்பம்-நீர் நிறைந்த குடம். ஏந்தி-தங்களுடைக.