பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பெரிய புராண விளக்கம்-10

அடுத்து உள்ள 13-ஆம் செய்யுளிள் கருத்து வரும்ாறு: அந்தச் சீகாழியில் உள்ள வயல்களில் இருக்கும் மடை கள் உள்ள எல்லா இடங்களிலும் மாணிக்கங்களின் குவியல் ஒளியை வீசிக் கொண்டு விளங்கும்; வயல்களில் உள்ள எந்த இடங்களிலும் கயல் மீன்கள் வெள்ளத்தைப் போல மிகுதி யாகத் துள்ளிக் குதிக்கும்; அந்தச் சீகாழியின் பக்கங்களில் உள்ள எல்லா இடங்களிலும் பலவகை மலர்கள் மலையைப் போலக்குவிந்திருக்கும்; அந்தச் சீகாழியின் வெளியிடங்கள் எங்கும் யாகங்களின் தோற்றப் பொலிவு திகழும்; வேத பாடசாலைகள் உள்ள எல்லா இடங்களிலும் இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களாகிய சாத்திரங்கள் சூழ்ந்திருக் கும் இடங்கள் திகழும்; கிளர்ந்து எழும் மலர்கள் உள்ள எல்லா இடங்களிலும் ரீங்காரம் செய்யும் வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கும்; எல்லா இடங்களிலும் முனிவர்களின் கூட்டத்தைக் காணலாம்; திருமதிலின் மேல் எந்த இடத்திலும் தவழும் மேகங்கள் இருக்கும். பா.ல் வருமாறு: -

மடைஎங்கும் மணிக்குப்பை, வயலஎங்கும் கயல்

புடைஎங்கும் மலர்ப் பிறங்கல்; புறமெங்கும் மகப்

பொலிவு: கிடைஎங்கும் கலைச் சூழல், இளர் வெங்கும் முரல்

«ខ្លាវ៉ាឌ៩ இடைஎங்கும் முனிவர்குழாம்; எயிலெங்கும் - பயில் எழிலி.' மடை-அந்தச் சீகாழியில் உள்ள வயல்களில் இருககும் , மடைகள் உள்ள ஒருமை பன்மை மயக்கம். மடை-வயலுக்கு நீர்பாயும் சிறிய கால்வாய். எங்கும். எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். மணி-மாணிக்கங்களின்: ஒருமை பன்மை மயக்கம். 'நவரத்தினங்களின் எனலும் ஆம். நவரத் தினங்களா. வன: முத்து பவளம், மாணிக்கம், பதுமராகம்,