பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 213

இந்தத் தலத்தைப் பற்றி நட்டராகப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

" இத்தனை யாமற்றை அறிந்திலேன் எம்பெருமான் பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம் முத்தினை மனிதன்னை மாணிக்கம்

முளைத்தெழுந்த வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.”

பின்பு வரும் 130-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'உண்மையான முறையில் சீகாழியில் உள்ள பிரமபுரீசரு டைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின் மேல் வீற்றிருக கும் பெரிய நாயகியார் தம்முடைய கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற்கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்து வழங்கிய சிவஞானப் பாலைக் குடித்தருளிய மறை யவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அந்த முறையில் பக்கத்தில் சுற்றியுள்ள சிவத்தலங்களுக்கு எழுந் தருளி அந்தத் தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும் ஹரனார்களுடைய தங்கத்தைப் போன்ற திருவடிகளை அந்தச் சிவத்தலங்களில் வாழும் பக்தர்களோடு சேர்ந்து கொண்டு அந்தச் சிவபெருமான்களை வாழ்த்தி வணங்கி விட்டு இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்களுக்கு உஜ்ஜீவனத்தை அடையும் விதத்தை உதவும் பான்மையைப் பெற்ற ஒரு திருப்பதிகத்தை அந்த நாயனார் பாடியருளி எந்த வகையான சாதிகளில் பிறந்த மக்களும் துதிக்க எங்கும் நிறைந்தவராகிய சிவபெருமானாரைத் துதித்து வணங்கும் காலத்தில். பாடல் வருமாறு: -

அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார்

பொற்றாள் மெய்வகை ஞானம் பெற்ற வேதியர் விரவிப் போற்றி உய்வகை மண்ணு ளோருக் குதவிய பதிகம் பாடி எவ்வகை யோரும் ஏத்த இறைவரை ஏத்தும் காளில்."