பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சமபந்த மூர்த்தி நாயனார் புராணம் 217 7

விட்டு. எழுந்து-பிறகு தரையிலிருந்து - எழுந்து நின்று கொண்டு. விரும்பு-தாம் விழையும். ஆர்வத்தொடும் -பேராவலோடு. ஏத்தி-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ரைத் துதித்து. மெய்-உண்மையான ம்: சந்தி. மொழி களால்-வார்த்தைகளால். து தி த் து.தோத்திரங்களைப் புரிந்து. வரும்-தம்மிடம் வரும். பான்மை-தன்மையை. தருவழங்கும். வாழ்வு-நல்ல வாழ்வு. வந்து எ ய் த-வந்து தம்மை அடைய. மகிழ்.மகிழ்ச்சியில். சிறந்தார்-தலை சிறந்து நின்றார்.

பின்பு வரும் 133-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு அளவு இல்லாத மகிழ்ச்சியை அடைந்தவர: கிய திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனாரைத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பார்த்து, 'ஐயரே, நீங்கள் உங்களுடைய திருவுள்ளம் மகிழ்ச்சியை அடையுமாறு: இந்தச் சீகாழிக்கு வந்து சேர்ந்த உறுதியான செயலை அடியேங்கள் பெற்றிருக்கிறோம்' என க் கூறி இளம் பருவத் தைப் பெற்ற திலாவை வீசும் சந்திரனைப் போன்ற சிரிப்புத் தம்மிடம் அரும்ப அவ்வாறு கூறியவராகிய அந்தப் பெரும் பாண ரைத் தம்மோடு அழைத்துக் கொண்டு தம்முடைய திருக்கழுத்தில் மேவும் ஆலகால விடத்தைப் புனைத்து கொண்டவராகிய பிரமபுரீசரிடம் எழுந்தருளி அடையும் கவுண்டின்ய கோத்திரத்தில் திருவவதாரம் செய்தருளிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். பாடல் வருமாறு:

'அளவிலா மகிழ்ச்சியினால் தடிைநோக்கி, ஐயர்நீர்

உளம் மகிழ இங்கணைந்த உறுதியுடை யோம்'என்றே இளநிலா நகைமுகிழ்ப்பு இசைத்தவரை உடன்கொண்டு களம்கிலவு கஞ்சணிந்தார் பாலணையும் கவுணியனார்.'

இந்தப் பாடல் குளகம். அளவு-அவ்வாறு அளவு. இலாஇல்லாத இடைக்குறை. மகிழ்ச்சியினால் தமை-மகிழ்ச்சியை அடைந்தவராகிய திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனாரை. தமை:இடைக்குறை. தம்:அசைநிலை. நோக்கி