பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 225

யாழ்ப்பெரும்பாண நாயனார். பாடியபின் தம்முடைய யாழை மீட்டி இசைப் பாடல்களைப் பாடிய பிறகு. கண்ணு தலார்-தம்முடைய நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்றவராகிய தோனியப்பர். அருளினால்-வழங்கிய திருவருளால். காழியர்-சீகாழியில் வாழும் அந்தணர்களி னுடைய, ஒருமை பன்மை மயக்கம். கோன். அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்; ஒருமை பன்மை மயக்கம். கொடு. அந்தப் பெரும்பானரைத் தம்மே டு அழைத்துக் கொண்டு. போந்து-எழுந்தருளி. நண்ணிஅந்தப் பெரும்பாணர் சென்று. உறை இடம்-தங்கும் இடத்தை. சமைத்து-அமைத்து வழங்கி. நல்.நல்ல ஆறு சுவைகளைப் பெற்ற, விருந்து-விருந்து உணவையும், ஆகுபெயர். சிறந்து-சிறப்பாக இருந்து. அளிப்ப-அந்தப் பெரும்பாணருக்கு வழங்கியருள.

பின்பு வரும் 138-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் வழங்கிய திருவருளைப் பெற்றுக் கொண்ட அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப்பெருமபாண நாயனார் பிறைச் சந்திரனைப் புனைந்து கொண்டிருந்த கங்கையாற்றினுடைய நீர் வெள்ளத்தைத் தங்க வைத் திருக் கும் சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவரா கிய தோணியப்பருக்கு அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய உண்மைகளைக் கூறும் ஒரு திருப்பதி கத்தை உள்ளவாறு கேட்டவுடன் பக்தியினால் உருக்கத்தை அடையும் பெருமையைப் பெற்று விளங்கும் மகிழ்ச்சியைக் கொண்டவராகித் தெளிவாக உள்ள அமிர்தத்தைப் பருகிய வரைப் போல அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப்பெரும் பாண நாயனார் தம்முடைய திருவுள்ளத்தில் ஆனந்தம் அடையும் வண்ணம் அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை வணங்கினார். பாடல் வருமாறு:

டெ-10-15