பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、男ó母 பெரிய புராண விளக்கம்-10

தருளியிருக்கும சிவபெருமான்களை வாழ்த்தி வணங்கிவிட்டு முட்களுக்கு நடுவில் வெளியில் உள்ள வெண்மையான மடல் களைப் பெற்ற தாழம்பூ மலர்ந்திருக்கும் தாழை மரத்தில் அரும்புகள் மலரும் மலர்களில் கமழும் நறுமணம் அற்றிப் பரவப் பலவகையான பறவைகள் தங்கப் பெற்ற விசால மான வ ய ல் க ளு ம் தடாகங்களும் பக்கத்தில் அகல அப்பால் எழுந்தருளி அழகிய கொள்ளிட ஆற்றினுடைய கரையை அடைந்தார். பாடல் வருமாறு: -

கள்ளிருட்கண் ஆடுவார் உறையதி

நடுவுகண் டன்போற்றி முள்ளிடைப்புற வெள்ளிதழ்க் கேதகை

முகிழ்விரி மணம் சூழப் புள்ளுடைத் தடம்பழனமும் படுகளும்

புடைகழிந் திடப்போக்து கொள்ளிடத்திரு நதிக்கரை அணைந்தனர்

கவுணியர் குலதீபர்.' இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. கவுணியர்-சீகாழியில் வாழும் அந்தணர்களுக்குள் கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்தவர்களுடைய, ஒருமை பன்மை மயக்கம். குல-குடும்பத்தில். தீபர்-திருவிளக்கைப் போலத் திருவவதாரம் செய்தருளிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்; உவம ஆகுபெயர். நள்ளிருட்கண்சர்வப்பிரளய காலமாகிய நடுஇரவில், ஆடுவார்-நின்று கொண்டு திருநடனம் புரிந்தருளுபவராகிய நடராஜப் பெருமானார். உறை-எழுந்தருளியிருக்கும். பதி-சிவத் தலங்களை ஒருமை பன்மை மயக்கம். நடுவு-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிதம்பரத்திற்கு எழுந்தருளும் போது இடையில். கண்டன்-தாம் பார்த்த சிவத்தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான்களை ஆகுபெயர். போற்றி. வாழ்த்தி வணங்கி விட்டு. முள்-முட்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். இடை-நடுவில், ப்:சந்தி, புற-வெளியில்