பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பெரிய புராண விளக்கம்-10

'தவமெய்க்குல திபன். என்று நம்பியாண்டார் நம்பியும், "ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை." என்று ஆண் டாளும், 'நந்தா விளக்கே அளத்தற் கரியாய்.", 'அமரர்க்கருள் விளக்கினை. ’, ‘விளக்கினை விதியிற் காண்பார்.’’ என்று திருமங்கையாழ்வாரும், *“品官邸 விளக்கை என் ஆவியை. என்று நம்மாழ்வாரும், ஞான மணி விளக்கெழுந்து வருவதென.' என்று சேக்கிழாரும், 'நந்தா விளக்கனைய நாயகனே. என்று கம்பரும் பாடி யருளியவற்றையும் காண்க. х பிறகு வரும் 146-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், வண்டு. கள் மொய்த்து ரிங்காரம் செய்து எழுகின்ற செழுமையைப் பெற்ற பலவகையான மலர்கள் குவிந்திருக்கும் மலையையும், மானிக்கங்களையும் சந்தனமரத்தையும் தள்ளிக் கொண்டு. சோலையில் உள்ள பலவாக இருக்கும் மலர்கள், காய்கள், கனிகள் முதலிய வளங்களோடும் ஒடி வருகின்ற நீர் தங்கித் தம்முடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளை வருடத் தெளிவைப் பெற்ற அலைகளை வீசும் சமுத்திரத்தில் தோன்றும் பவளங்களையும், சங்குப்பூச்சி களையும், செழிப்பைப் பெற்ற மாணிக்கங்களையும், திரண் டிருக்கும் முத்துக்களையும் வாரிக் கொண்டு ஒலித்துக கொண்டு தள்ளும அலைகள் அந்த இடத்தில் தம்மை எதின் கொண்டு வரவேற்கக் கொள்ளிட ஆற்றைத் தாண்டி அதன. கரையின் மேல் ஏறி. பாடல் வருமாறு:

வண்டி ரைத்தெழு செழுமலர்ப் பிறங்கலும்

மணியும்ஆ மும்உங்தித் தண்ட லைப்பல வளத்தொடும் வருபுனல்

தாழ்ந்துசே வடிதாழத் தெண்டி ரைக்கடற் பவளமும் பணிலமும்

செழுமனித் திரள் முத்தும் கொண்டி ரட்டியுங் தோதமங் கெதிர்கொளக்

கொள்ளிடம் கடந்தேறி.'