பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 259

திருவுள்ளத்தில் விளங்கும் சிதம்பரத்தில் உள்ள அழகிய தெரு தம்முடைய கண்களுக்குக் களிப்பை உண்டாக்க பக்தி பினுடைய பிரயோசனத்தைப் பெற்றுக் கொள்ளும் வலிமையைப் பெற்றவராகிய அந்த நாயனார் திருக்கோயி லுக்கு முன்னால் உயரமாக நிற்கும் ஏழு தளங்களைக் கொண்ட கோபுர வாசலில் அந்த நடராஜப் பெருமானாரைத் தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு அந்த நடராஜப் பெருமானாரை வாழ்த்தி வணங்கி எழுந்தார். பாடல் வருமாறு:

மலர்ந்த பேரொளி குளிர் தரச் சிவமணம்

கமழ்ந்துவான் துகள் மாறிச் சிலம்பு லம்புசே வடியவர் பயில்வுறும்

செம்மையால் திருத்தொண்டு கலந்த அன்பர்தம் சிந்தையில் திகழ்திரு

வீதிகண் களிசெய்யப் பலன்கொள் மைந்தனார் எழுகிலைக் கோபுரம்

பணிந்தெழுந் தணர்போற்றி.” மலர்ந்த-மலர்ச்சியை அடைந்த பேரொளி-பெருமை யைப் பெற்று விளங்கும் பிரகாசம். குளிர்-குளிர்ச்சியை: முதல்நிலைத் தொழிற்பெயர். தர-வழங்க. ச்:சந்தி. சிவமணம்-சைவ சமயத்துக்குரிய விபூதியின் நறுமணம். கமழ்ந்துவான்.கமழ்ந்த வெண்மையாகிய துகள்-புழுதி. மாறி-அடங்கிப் போய். ச்:சந்தி. சிலம்பு-சிலம்புகள்: ஒருமை பன்மை மயக்கம். அலம்பு-ஒலிக்கும். சேவடியவர்.செந் தாமரை மலர்களைப் போலச் சிவந்து விளங்கும் திருவடி களைப் பெற்றவராகிய நடராஜப் பெருமானார். அடி:ஒருமை பன்மை மயக்கம். பயில்வுறும்-திருநடனம் புரிந்தருளும். செம்மையால்-சிறப்பான பான்மையினால், திருத்தொண்டு. திருத்தொண்டுகளைப் புரிவதில்: ஒருமை பன்மை மயக்கம். கலந்த-கலந்திருக்கும். அ ன் ப ர் த ம்-பிரமபுரீசருடைய பக்தருடைய. தம்: அசைநிலை. சிந்தையில்-திருவுள்ளத்தில். திகழ்-விளங்கும். திருவீதி-சிதம்பரத்தில் உள்ள அழகிய ஒரு.