பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குஞான சம்பந்த மூர்த்தி நாயனாா புராணம் 28岳*

சம்பந்த மூர்த்தி நாயனாரை, தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும் திருஞான சம்பந்த மூர்த்தி நாய னாரை வணங்கினார்கள். உடன்-உடனே. இறைஞ்சிஅந்தத் தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களை யும் வணங்கி. மல்லல்-வளப்பத்தைப் பெற்ற அணி-அழகிய, வீதி-ஒரு தெருவினுடைய மருங்கு-பக்கத்தை. அணைய. அடைவதற்காக வந்தார்கள்-அந்தத் தில்லைவாழ் அந்த ணர்கள் மூவாயிரம் பேர்களும் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும் வந்தார்கள். -

பின்பு வரும் 172-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

“தம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி மேல் எழும் விருப் பம் தெளிவாகத் தெரியுமாறு பூமியில் வாழும் தேவர்களா கிய அந்தணர்களுடைய சிங்கத்தைப் போன்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய அழகிய தலையின் மேல் கூப்பி நடராஜப் பெருமானாரைக் கும்பிட்ட செந்தாமரை மலர்களினுடைய செவ்வையான அழகைப் பழித்து எழில் ஓங்கி விளங்கும் சிவந்த திருக்கரங் களோடும் எழுந்தருளி நடராஜப் பெருமானார் எழுந்தருளி யிருக்கும் திருக்கோயிலுக்கு முன்னால் உயரமாக நிற்கும் கோபுர வாசலுக்குள் நுழைந்தார். பாடல் வருமாறு:

  • பொங்கி எழும் காதல் புலனாகப் பூசுரர்தம்

சிங்கம் அனையார் திருமுடியின் மேற்குவித்த பங்கயத் தின்செவ்வி பழித்து வனப்போங்கும் செங்கை யொடும்சென்று திருவாயி லுட்புக்கார்.

பொங்கி-த ம் மு ைட ய திருவுள்ளத்தில் டொங்கிக் கொண்டு. எழும்.மேலே எழும். காதல்-விருப்பம். புலனாகதெளிவாகப் புலப்படுமாறு. பூசுரர் தம்-பூமியில் வாழும் தேவர்களாகிய அந்தணர்களினுடைய. சுரர்: ஒருமை. பன்மை மயக்கம். தம்: அசைநிலை. சிங்கம்-சிங்கத்தை. அணையார்-போன்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். திரு முடியின் மேல் தம்முடைய அழகிய தலை