பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 287

' ஒன்றிய சிங்தை உருக உயர் மேருக்

குன்றனைய பேரம் பலமருங்கு கும்பிட்டு மன்றுள் நிறைந்தாடும் மாணிக்கக் கூத்தர்எதிர் சென்றணைந்து தாழ்க்தார் திருக்களிற்றுப்

படிக்கீழ்."

ஒன்றிய-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஒருமைப்பாட்டை அடைந்த சிந்தை-தம்முடைய திருவுள் வாம். உருக-பக்தியினால் உருக்கத்தை அடைய. உயர்-உயர மாக விளங்கும். மேருக்குன்று-மேருமலையை. அனையபோன்ற, பேரம்பலம்-பேரம்பலத்தினுடைய. மருங்குபக்கத்தில் இருந்தபடியே. கும்பிட்டு-அந்த நடராஜப் பெரு மானாரைக் கும்பிட்டு விட்டு. மன்றுள்-சிதம்பரத்தில் உள்ள திருக்கோயிலில் இருக்கும் திருச்சிற்றம்பலத்தில். நிறைந்துதிருவருள் நிர ம் பி. ஆடும்-திருநடனம் புரிந்தருளும். மாணிக்கக் கூத்தர்-மாணிக்கக் கூத்தருடைய. எதிர்-சந் நிதிக்கு. சென்று-எழுந்தருளி. அணைந்து-அடைந்து. திருக் களிற்றுப்படிக்கீழ்த் தாழ்ந்தார்-அந்த நாயனார் தரையில் விழுந்து நடராஜப் பெருமானாருடைய சந்நிதிக்கு முன்னால் உள்ள திருக்களிற்றுப்படியின் கீழே வணங்கினார்.திருக்களிற் றுப்படி-இரண்டு பக்கங்களிலும் யானைகளின் திருவுருவங் *, ୫ ଜ୩ଈt அமைத்த படிக்கட்டு.

அடுத்து உள்ள 174-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், 'ஆடி னாய் நறுநெய்யொடு பால்தயிர்' எனத் தொடங்கிப் பேராவலோடு ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளினார்: அந்தத் திருப்பதிகத்தில் அமைந்த ஒரு பாசுரத்தில் நெடுங் காலமாகப் புகழோடு வாழும் தில்லையில் விளங்கும் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றியவர்களாகிய தில்லைவாழ் அந்தணர் கள் மூவாயிரம் பேர்களையும் தாம் பார்த்த அந்த நிலைகள்